ஆயுத பூஜை ஸ்பெஷல் வாழைக்காய் வாங்கி இப்படி செஞ்சி பாருங்க பார்த்தாலே நாவில் எச்சி ஊறும்!

Summary: முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது. மேலும் நம்முடைய அன்றாட உணவுகளிலும் சேர்த்துக்கொள்ளும் ஒன்றாகவும் உள்ளது. வாழைக்காய் வறுவல் சாதாரணமாக சட்டியிலோ அல்லது தோசை கல்லிலோ மசாலவை தடவி அப்படியே வறுத்துதான் சாப்பிடுவோம். ஆனால் கேரளா ஸ்டைலில் பொழிச்ச வாழைக்காய் என்று சொல்லப்படும் வாழைக்காய் வறுவல் வாழை இலை வைத்து செய்வது. இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

Ingredients:

  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1/4 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • உப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  • 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1/2 கப் நறுக்கிய சின்ன வெங்காயம்
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 தக்காளி
  • உப்பு
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/4 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/4 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1/2 கப் தேங்காய் பால்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 தவா
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் வாழைக்காயை நன்கு கழுவி தோலை நீக்கி விட்டு, சீவிக் கொள்ளவும்.
  2. பின்னர் ஊற வைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒரு பவுளில் சேர்த்து நன்கு கலந்து பின் வாழைக்காயை சேர்த்து 15 நிமிடங்கள் வரை ஊற‌ வைத்துக் கொள்ளவும்.
  3. ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  4. சிறிது நேரம் கழித்து தக்காளி சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லி தூள், சீரகத்தூள், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலந்து விட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு பச்சை வாசனை போக வதக்கவும்.
  5. பச்சை வாசனை போனவுடன் தேங்காய் பால் சேர்த்து நன்கு கலந்து விட்டு கொதிக்க விடவும். இது சற்று சுண்டி கிரேவி பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  6. பின் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற‌ வைத்த வாழைக்காயை பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  7. அதன்பிறகு ஒரு வாழையிலையில் நாம்‌ செய்து வைத்த கிரேவியை வைத்து அதன் மேல் பொரித்த வாழைக்காயை வைத்து பின்‌ அதன்‌ மேல் மறுபடியும் கிரேவியை வைத்து ஒரு பொட்டலம் போல் நூலால் கட்டிக் கொள்ளவும்.
  8. ஒரு தவாவை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி பொட்டலத்தை வைத்து இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்.
  9. அவ்வளவுதான் சுவையான வாழைக்காய் பொழிச்சது தயார்.