காலை வேளையில் சாப்பிட ருசியான வரகரிசி காய்கறி சூப் இப்படி செஞ்சு பாருங்க! குடிக்கவும் நல்லாருக்கும் உடலுக்கும் சத்து!

Summary: சிறுகாணியத்தில்  நமக்குத் தெரிந்து பெரும்பாலும் அடை, களி, கூழ்போன்றவற்றை தான் செய்வார்கள். இப்பொழுது அதை வைத்து பல ரெசிபிகள் உள்ளது. ஆனாலும் அதையெல்லாம் செய்ய கொஞ்சம் நேரம் எடுக்கும் என்பதால் அதை தவிர்த்து விட்டு எப்பொழுதும் போல் நாம் உண்ணும் உணவுகளையே உடனே செய்து சாப்பிட்டு விடுகிறோம். இந்த முறையில் வரகரிசி காய்கறி சூப் செய்வது எப்படி என்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதை சுலபமாகவும் செய்ய முடியும் அதே நேரத்தில் சுவையுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும். இந்த சமையல் குறிப்பு பதிவில் இந்த வரகரிசி காய்கறி சூப் எப்படி செய்வது என்று இப்போது தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Ingredients:

  • 1/4 கப் வரகரிசி
  • 1/4 கப் நறுக்கிய கேரட் பீன்ஸ், உருளைக்கிழங்கு • பச்சை பட்டாணி
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 இன்ச் இஞ்சி
  • 5 பல் பூண்டு
  • புதினா கொத்தமல்லி
  • 1 ஸ்பூன் வெண்ணெய்
  • 1 ஸ்பூன் சீரகம்,மிளகுப் பொடி
  • 1 ஸ்பூன் பிரியாணி இலை
  • 1/4 கப் தேங்காய்ப் பால்
  • உப்பு

Equipemnts:

  • 1 குக்கர்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. அரிசியை நன்றாக கழுவி அரை மணிநேரம் ஊறவைக்கவும் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும் இஞ்சி பூண்டு நன்றாக தட்டி வைக்கவும்
  2. குக்கரில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், பிரியாணி இலை, சீரகம் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும் வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டை போட்டு வதக்கவும்.
  3. அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும் . அடுத்து அதில் நறுக்கிய காய்கறிகள், பட்டாணி சேர்த்து வதக்கவும். அடுத்து சுத்தம் செய்த வரகரிசியைச் சேர்க்கவும்
  4. ஐந்து கப் நீர் சேர்த்து குக்கரை மூடி 4 விசில் வந்ததும் சிம்மில் 10 நிமிடம் வைத்து இறக்கிவிடவும்
  5. பிரஷர் அடங்கியதும் மூடியைத் திறந்து, உப்பு, மிளகுத் தூள், தேங்காய்ப்பால் சேர்த்துக் கிளறவும்
  6. இப்போது சூப்பரான காய்கறி சூப் ரெடி