Summary: குழந்தைகளுக்கு மீன் மிகவும் பிடிக்கும். உணவில் பிரதானம் சுவையாக உண்ணவேண்டும் என்பதுதான். நாம் இந்த லெமன் பெப்பர் வறுவலை செய்ய இருக்கிறோம். மீன் குழம்பு அதிக சுவையுடையதாகத்தான் இருக்கும். மீன் பிரியாணி பிடித்தவர்களுக்கும் மீன் எப்படி செய்தாலும் நல்ல சுவையாக இருக்கும். இருந்தாலும் மீன் வறுவலுக்கு என்று தனியாக ஒருக கூட்டமே இருக்கின்றது .மீனில் இருக்கும் ஒமேகா 3 கால்சியம் வைட்டமின்கள் போன்றவை உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரக்கூடியவை. இவைகளில் கெட்ட கொழுப்புகள் இல்லாததால் இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதய நோயாளிகள் கூட மீன் உணவை உணவில் எடுத்து கொள்ளலாம். இந்த லெமன் பேப்பர் மீன் வறுவலை எந்த மீனில் வேண்டுமானாலும் செய்யலாம். வஞ்சரம் மீனில் செய்யலாம்.