வீட்டில் சத்துமாவு இருந்தால் பஞ்சு போல கேக் இப்படி செய்து அசத்துங்கள் கொஞ்சம் கூட மிச்சமாகாது!

Summary: 90 களில் பள்ளி காலங்களில் அதிகமா உண்ணப்பட்ட ஒரு சத்தான உணவு அப்படின்னு பார்த்தோம்னா அங்கன்வாடிகளில் வாங்கின சத்து மாவு தான். இந்த சத்து மாவுல கொழுக்கட்டை, கஞ்சி, புட்டு இப்படின்னு விதவிதமா செஞ்சு ஈவ்னிங் டைம்ல நமக்கு சிற்றுண்டியா கொடுத்து பழகி இருக்காங்க. அந்த சத்துமாவு கஞ்சி எவ்வளவு டேஸ்டா இருக்கும் அப்படின்னு சொல்றதுக்கே வார்த்தை இருக்காது. அதுல அவ்வளவு சத்துக்கள் இருக்கும்.

Ingredients:

  • 1 1/2 கப் சத்து மாவு
  • 1/4 கப் சர்க்கரை
  • 1 ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  • 1/4 கப் சமையல் எண்ணெய்
  • 1 முட்டை
  • 12 கப் பால்
  • 12 ஸ்பூன் பேக்கிங் சோடா

Equipemnts:

  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் சத்து மாவை போடவும். அங்கன்வாடி சத்துமாவு அல்லது கடையில் வாங்கிய சத்துமாவு உங்கள் விருப்பம்போல் எடுத்து  கொள்ளவும்.எடுத்து கொண்ட சத்து மாவை பொடியாக அரைத்து கொள்ளவும்.
  2. பின் இதில்  சர்க்கரை , வெண்ணிலா எசன்ஸ் ,  சமையல் எண்ணெய் சேர்த்து நன்றாக  அரைத்து கொள்ளவும். வெண்ணிலா எசன்ஸ் அல்லது ஏலக்காய் சேர்த்து கொள்வது உங்கள் விருப்பம்.
  3. பின் முட்டையை சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.  முட்டை வாசனை பிடிக்காதவர்கள் 14  கப் தயிர் சேர்த்து கொள்ளலாம்.
  4. அரைத்த மாவை ஒரு  பாத்திரத்தில் மாற்றி சிறிது சிறிதாக பால் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.இதில்  பேக்கிங்சோடா சேர்த்து மெதுவாக கலந்து விடவும்.
  5. பின் கேக் செய்யும் பாத்திரத்தில் எண்ணெய் தடவி பின் கேக் செய்ய தயார் செய்து வைத்துள்ள மாவை கொட்டி நன்றாக தட்டவும். அப்போது தான் கேக்கில் காற்று குமிழ்கள் இருக்காது.
  6. குக்கரில் கேக் பாத்திரத்திம் வைக்க ஸ்டாண்டை வைத்த 10 நிமிடம் சூடாக்கி கொள்ளவும்.குக்கர் சூடானதும்  அதில்கேக்கை வைத்து 20 நிமிடம் விசில் போடாமல் வைத்து வேக வைக்கவும்.
  7. 20 நிமிடத்திற்கு பிறகு குக்கர் மூடியை திறந்து விட்டு ஒரு குச்சி வைத்து கேக்கை குத்தி பார்த்தால் குச்சியில் கேக் ஒட்டாமல் வர வேண்டும். அப்படிவந்தால் கேக் தயார் என்று பொருள்.
  8. பின் கேக் ஆறியதும் சுற்றியுள்ள பக்கங்களை லேசாக பிரித்து விட்டு ஒரு தட்டில் தலைகீழாக கொட்ட வேண்டும்.இதோ சுவையான சத்தான பஞ்சு போன்ற சத்து மாவு கேக் தயார்.