மாலை நேர பசி எடுத்தால் சட்டுனு இடியாப்ப பிரியாணி இப்படி சாப்பிட்டு பாருங்க! பார்த்தாலே நாவில் எச்சி ஊறும்!

Summary: குழந்தைகளுக்கும் இது ஒரு வித்தியாசமான மாலை சிற்றுண்டியா இருக்கும். அப்படிப்பட்ட மாலை சிற்றுண்டி இடியாப்ப பிரியாணி ரொம்ப சுலபமா எப்படி செய்து சாப்பிட போறோம் அப்படிங்கறத தெரிஞ்சுக்க போறோம். இதுக்கு நம்ம ரொம்ப கஷ்டப்பட்டு மசாலாக்கள் எல்லாம் அரைக்க போறது இல்ல எல்லாமே பாக்கெட் மசாலா வாங்கி வைத்திருந்து அந்த மசாலாவில்  நம்மஇப்போ செய்ய போறோம். ஏன் இடியாப்பம் அப்படிங்கிறது ஆல்ரெடி தயார் நிலையில்  வச்சிருக்கஒரு உணவு அதை வைத்து நம்ம பண்ணும் போது ரொம்ப நேரம் வேக வைக்கிறது அவசியம் இல்லை.  ஆகையால்நம்ம  ரொம்பசுலபமாக செய்யறதுக்கு அந்த பவுடர் எல்லாம் நமக்கு  ரொம்பஉபயோகமா இருக்கும். சுலபமா செய்யப்போறம் இந்த இடியாப்ப பிரியாணியை. எப்படி இந்த இடியாப்ப பிரியாணி செய்யலாம் அப்படிங்கிறத தெரிஞ்சிக்கலாம் வாங்க.

Ingredients:

  • 2 கப் உதிர்த்த இடியாப்பம்
  • 1 தக்காளி
  • 2 வெங்காயம்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் கரம் மசாலா
  • 1 ஸ்பூன் பிரியாணி மசாலா
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. இடியாப்பத்தை நன்றாக உதிரி உதிரியாக உதிர்த்து கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். பிறகு அதில் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கவும்.
  3. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்றாக குழைய வதக்கவும்.தக்காளி சுருண்டு வரும் போது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  4. இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனதும் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, பிரியாணி மசாலா சேர்த்து 2 நிமிடம் கிளறி விடவும்
  5. மசாலா பச்சை வாசனை போனவுடன் உதிர்த்து வைத்துள்ள இடியாப்பத்தை சேர்த்து தன்றாக கலந்து விட்டு அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான சூப்பரான இடியாப்ப பிரியாணி ரெடி.
  6. மாலை நேர சிற்றுண்டிக்கு அருமையான சுவையில் இடியாப்ப பிரியாணி பரிமாற தயார்.