மட்டன் சுவையில் சோயா கிரேவி செய்வது எப்படி ?

Summary: நமக்கு சில சமயங்களில் இன்று மட்டன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும் இருந்தாலும் எல்லா நாட்களிலும் அதை செய்து விட முடியாது. செவ்வாய், வெள்ளி மற்றும் விரத நாட்கள் இப்படி பட்ட நாட்களில் அசைவ உணவுகளை நாம் தவிர்த்து விடுவோம். இதுபோன்ற சமயங்களில் உங்களுக்கு இந்த சோயா கிரேவி பெரிதும் உதவியாக இருக்கும் ஆம், சோயாவை பயன்படுத்தி மட்டன் சுவைையில் அற்புதமாக கிரேவி ஒன்று செய்யலாம் அதைப்பற்றி தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். நீங்கள் இப்படி உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 1 துண்டு இஞ்சி
  • 5 பல் பூண்டு
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 பெரிய தக்காளி
  • 100 கிராம் சோயா
  • 2 tbsp எண்ணெய்
  • 1 பிரியாணி இலை
  • 2 கிராம்பு
  • 1 பட்டை
  • ¼ tbsp சோம்பு
  • 1  பச்சை மிளகாய்
  • அரைத்த விழுது
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • 2 மிளகாய் தூள்
  • 1 தனியா துள்
  • ½ tbsp கரம் மசாலா
  • உப்பு
  • 2 tbsp தயிர்
  • தண்ணீர்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஒரு 100 கிராம் அளவிலான சோயாவை ஒரு பெரிய பவுளில் சேர்த்து அதனுடன் கொதிக்க வைத்த சூடான நீரை சேர்த்து ஒரு பத்து நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்பு சோயாவை தண்ணீர் இல்லாமல் பிழிந்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து.
  2. அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் சோயாவை சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் சோயவை வதக்கி விட்டு ஒரு பவுளில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  3. பின்பு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொண்டு அதில் ஒரு துண்டு இஞ்சி, ஐந்து பல் பூண்டு, இரண்டு பெரிய வெங்காயம் மற்றும் இரண்டு தக்காளி சேர்த்து மையாக அரைத்து கொள்ளவும்.
  4. பின்பு மறுபடியும் அதே கடாயில் இரண்டு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் ஒரு பிரியாணி இலை, ஒரு பட்டை, இரண்டு கிராம்பு, கால் டீஸ்பூன் அளவு சோம்பு, ஒரு கொத்து கருவேப்பிலை மற்றும் ஒரு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
  5. பின் நாம் மிக்ஸியில் அரைத்த விழுதையும் கடாயில் சேர்த்து வதக்கி கொள்ளவும். பின் இதனுடன் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு டீஸ்பூன் மிளகாய் தூள், ஒரு டீஸ்பூன் தனியாத்தூள் மற்றும் அரை டீஸ்பூன் கரம் மசாலா சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளுங்கள்.
  6. பின் எண்ணெயும் கிரேவியும் தனியாக பிரிந்து வந்ததும் இதனுடைய தேவையான அளவு உப்பு மற்றும் இரண்டு டீஸ்பூன் அளவு தயிர் சேர்த்து நன்றாக கிளறி விட்டு. நாம் வைத்திருக்கும் சோயாவை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறி விட்டவும்.
  7. பின் இதனுடன் கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு ஐந்து நிமிடங்கள் கடாயை மூடி விட்டு நன்றாக வேக வைத்து இறக்கி விடுங்கள் அவ்வளவு தான் மட்டன் சுவையில் சோயா கிரேவி இனிதே தயாராகிவிட்டது.