கேரளா ஸ்பெஷல் நெய் பத்திரி இப்படி செஞ்சி பாருங்க இரவு டிபனுக்கு பக்காவான ரெசிபி மிஸ் பண்ணாதீங்க!

Summary: நெய் பத்திரி ரெசிபி என்பது கேரளாவில் பிரபலமானரொட்டியான பச்சரிசியில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு உணவு. பத்திரி பச்சரிசி மாவைப்பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது, கேரளா ஸ்டைல் நெய் பத்திரி ரெசிபியை குருமா,கேரளா ஸ்டைல் எக் ரோஸ்ட் கறியுடன் சேர்த்து பரிமாறவும்.ரேஷன் பச்சரிசி இருந்தால் சட்டுனுமாவாக அரைத்து சூப்பரான சுவையில் இந்த நெய் பத்திரி செய்து அசத்தலாம். வித்தியாசமாகசெய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இது போல முயற்சி செய்து பார்க்கலாம். நெய் பத்திரிபோல உப்பி வந்து நன்கு தேங்காய் மனமும் சுவையுடன் கூடிய இந்த பஞ்சு போன்ற மெத்தென்றநெய் பத்திரி அவ்வளவு அருமையாக இருக்கும்.

Ingredients:

  • 1 கப் வறுத்த பச்சரிசி மாவு
  • 1 கப் தண்ணீர்
  • 5 சின்ன வெங்காயம்
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 1/4 ஸ்பூன் உப்பு
  • 1 கப் நெய்

Equipemnts:

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் தேங்காயையும், சின்ன வெங்காயத்தையும் ப்ளென்டரில் நன்றாக தண்ணீரில்லாமல் அரைத்துக் கொள்ளவும் அல்லது அம்மியில் அரைத்துக் கொள்ளவும்.
  2. தண்ணீரை காயவைத்து அதில் அரைத்த தேங்காய் வெங்காய விழுதை சேர்த்து கொதித்ததும் அரிசி மாவை சேர்த்து தீயை குறைத்து மரகரண்டியால் கிளறி சிறிது கட்டியாகும்பொழுது தீயை அணைத்து விடவும்.
  3. மாவு லேசாக கை பொறுக்கும் அளவு சூடேறியதும் சிறு சிறு உருண்டைகளாக செய்யவும்.
  4. அதனை சின்ன சின்ன வட்டங்களாக உள்ளங்கை அளவுக்கு தேய்க்கவும் அல்லது ஒரு ப்ளாஸ்டிக் கவரில் எண்ணெய் தொட்டு அதன் நடுவில் மாவை வைத்து கையாலேயே சமமாக அழுத்தவும்.
  5. இது 2 சப்பாத்தியை சேர்த்து வைக்கும் தடிமனில் இருக்க வேண்டும்.  பின்னர்நெய்யை காயவைத்து அதில் இந்த பத்திரிகளை பொரித்து எடுக்கவும்.