தூனா மீனுடன் முட்டை சேர்த்து சூப்பரான கட்லெட் இப்படி சுலபமாக செய்து பாருங்க! இதன் ருசியே தனி!

Summary: மணக்க மணக்க தூனா மீன் உருளை கட்லெட்  ஒருமுறை இப்படி சுவைத்துவிட்டால், இதே மீன் கட்லெட் தான் சமைக்க வேண்டும் என்று அனைவரும் அடம் பிடிப்பார்கள்.மீன்கட்லெட் வார இறுதிகளில் குடும்பத்தோடு சுவைத்து மகிழ ஒரு அருமையான உணவாகும். தூனா மீன்வாங்கி இப்படி மீன் கட்லெட் ஒரு முறை செய்து வீட்டில் உள்ள அனைவரையும் அசத்துங்கள்.ஹோட்டல் களில் மட்டுமே நாம் சுவைத்து மகிழும் மீன் கட்லெட் இதே செய்முறையில் செய்தால்,நாவூறும் சுவையில் தூனா மீன் உருளை கட்லெட் வீட்டிலே அடிக்கடி செய்து ருசிக்கலாம்.

Ingredients:

  • 1/2 கிலோ தூனா மீன்
  • 1 பெரிய உருளைக்கிழங்கு
  • 2 வெங்காயம்
  • 4 பச்சைமிளகாய்
  • 3 முட்டை
  • 2 கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1 கரண்டி கரம் மசாலா
  • ரொட்டித்தூள்
  • 300 கிராம் எண்ணெய்
  • 1 டேபிள் ஸ்பூன் உப்பு

Equipemnts:

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.
  2. வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.முட்டையை ஒரு கோப்பையில் ஊற்றி கலக்கி வைக்கவும்.
  3. மீனை நன்றாக சுத்தம் செய்துவிடவும். ஒரு சட்டியில் 3 கரண்டி எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை லேசாக வதக்கி இஞ்சி பூண்டு விழுது, மசாலாத்தூள் போட்டு வதக்கவும்.
  4. நன்கு வதக்கி மசித்து வைத்த கிழங்கு மீனை போட்டு பிரட்டி எடுக்கவும், பின்பு அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
  5. சிறிது நேரம் கழித்து தேவையான வடிவில் உருண்டையாகவோ கட்டமாகவோ செய்து முட்டையில் நனைத்து ரொட்டித்தூளில் போட்டு பிரட்டி எண்ணெயில் போட்டு நன்கு பொரித்து சூடாக பரிமாறவும்.