சூடான பரங்கிக்காய் சுக்கு சூப் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க! சட்டுனு உடல் எடையை கூட குறைதத்து விடும்!

Summary: பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கு கர்ப்பப்பை மீண்டும் இயல்பு நிலையை அடைவதற்கு சுக்குடன் சில பொருட்களையும் சேர்த்து லேகியம் செய்து தருவார்கள். அப்படிப்பட்ட அரிய மருந்தாகிய சுக்கை நாம் சூப்பாக செய்து உணவில் சேர்த்துக்கொண்டு உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதற்கு பயன்படுத்திக் கொள்ள இருக்கிறோம். வாருங்கள் இந்த பரங்கிக்காய் சுக்கு சூப்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Ingredients:

  • 14 கப் பரங்கிக்காய்
  • 1 ஸ்பூன் சுக்கு
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 சிட்டிகை மஞ்சள்தூள்
  • உப்பு
  • கொத்தமல்லி தழை

Equipemnts:

  • 1 பெரிய பாத்திரம்

Steps:

  1. முதலில் பரங்கிக்காயை தோல் சீவி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  2. வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.  சுக்கு,மிளகு இரண்டையும் சேர்த்து இடித்து கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில்  பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பரங்கிக்காய் சேர்த்து வேகவிடவும். பின் காய்கள் முக்கால் பதம் வெந்ததும் சுக்கு, மிளகு , மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும்
  4. காய்கள் நன்றாக வெந்து தண்ணீர் வற்றியதும் மேலும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
  5. பிறகு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறினால் சூடான சத்தான் உடல் பருமனை குறைக்கும் பரங்கிக்காய் சுக்கு சூப் தயார்.
  6. இந்த பரங்கிகாய் சுக்கு சூப்பை தினமும் காலையில்  குடிப்பதால்உடல் பருமன் குறையும். தேவையில்லாத கொழுப்பு கரையும். உடல் ஆரோக்கியம் பெறும்