வீட்டில சிறிது கேழ்வரகு மாவு இருந்தால் இப்படி ருசியான களி செஞ்சி பாருங்க!

Summary: கேழ்வரகில்இயற்கையாகவே இரும்புச்சத்து உள்ளது. இதனால் இதனை அதிகம் உண்பது, இரத்த சோகை நோயை குணப்படுத்தஉதவுகிறது. கேழ்வரகு உட்கொள்வது இயற்கையாகவே உடலை ஓய்வு பெற செய்யும். மேலும் இது கவலை,மன அழுத்தம், மற்றும் தூக்கமின்மையை போக்க உதவுகிறது. வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு வாரத்தில் ஒரு முறையாவது கேழ்வரகு சேர்த்தஉணவினை சமைத்து தர வேண்டும். அப்போதுதான் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும்.. இதை கேழ்வரகு களி, கேப்பைக்களி எந்த பெயரில் வேண்டும் என்றாலும் நீங்கள் வைத்துக்கொள்ளலாம்.  இதற்கு தொட்டுக்கொள்ள சைவ கிரேவிஅசைவ கிரேவி, குருமா என்று எதை வேண்டுமென்றாலும் பரிமாறிக் கொள்ளலாம். அருமையான கேழ்வரகுகளி செய்முறை இதோ.

Ingredients:

  • 1 கப் கேழ்வரகு மாவு
  • உப்பு
  • 3 டீஸ்பூன் நல்லெண்ணெய்
  • 1 டீஸ்பூன் உளுந்து
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் கடலைப் பருப்பு
  • 3 காய்ந்த மிளகாய்
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து விட்டு ஒரு பங்கு மாவிற்கு இரண்டு பங்கு தண்ணீர் விட்டு உப்பு போட்டு கொதி வரும் வரை மூடி வைக்கவும்
  2. ஒரு கொதி வந்ததும் மாவை சிறிது சிறிதாக கொட்டி கொண்டே விடாமல், கட்டித் தட்டாத வாறு கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
  3. மாவு கட்டித் தட்டாமல் இருக்க whisk ஐப் பயன்படுத்தலாம்
  4. எல்லா மாவையும் கொட்டிய பிறகு தீயை மிதமாக வைத்து,கெட்டியாக ஆகும் வரை விடாமல் கிண்டி விட வேண்டும்.
  5. நன்றாக வெந்துவாசனை இறக்கிவிட வேண்டும் வந்ததும்
  6. இதற்கு தேங்காய் சட்னி,மீன் குழம்பு,கருவாட்டுக் குழம்பு போன்றவை பொருத்தமாக இருக்கும்