Summary: இட்லி தோசை என்றாலே அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒருவகையான உணவு. இவை காலை மற்றும் இரவு உணவுகளில் அதிகம் இடம் பெற்றிருக்கும். இத்தகைய இட்லி தோசைக்கு சட்னி தயார் செய்வதுதான் மிக பெரிய வேலையாகும். இல்லத்தரசிகள் பலர் இட்லி தோசை என்றால் அதற்கு என்ன சட்னி தயார் செய்வது என்ற குழப்பமும், கேள்வியும் எழும். இனி இந்த கேள்விக்கும், குழப்பத்திற்கும் முற்று புள்ளி வைங்க. நாம் தினமும் சாப்பிடும் உணவு முறையை சரியாக கையாண்டால் எந்த நோயில் இருந்தும் நம்மை பாதுகாத்து கொள்ளலாம். அந்த வகையில் கற்றாழை சட்னியில் அளவு கடந்த சத்துக்கள் உள்ளது. இது இட்லி, தோசைக்கு டேஸ்ட்டாக இருக்கும்.