வீடே கமகமக்கும் படி ருசியான காசிமேடு மீன் குழம்பு இப்படி செஞ்சி பாருங்க!

Summary: மட்டன் குழம்பு, கோழிக் குழம்பு வரிசையில் உள்ள மீன் குழம்புக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே அலாதி பிரியம் உண்டு. இந்த மணமணக்கும் மீன் குழம்புகளில் பல வகைகள் உள்ளன. அவை ஒவ்வொரு பகுதிகளுக்கும், ஊர்களுக்கும் ஏற்ப மாறுபடுகிறது. பொதுவாக கடல் உணவு அனைத்து வயதினருக்கும் உகந்த உணவு. பொதுவாக அனைத்து கடல் உணவுகளிலும் கால்சியம், வைட்டமின்-டி, புரதம், தாது உப்புக்கள், ஒமேகா-3, கொழுப்பு அமிலம், எண்ணெய், துத்தநாகம் போன்றவை உள்ளன. மீன் குழம்புகளில் ஒரு குறிப்பிட்ட மீன்களை சேர்ப்பதால் அவற்றுக்கு அந்த மீனின் பெயர்களே சூட்டப்படுகிறது. இதனை செய்யும் பொழுதே வீடு முழவதும் மணமணக்கும். இதனை சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

Ingredients:

  • 2 சங்கரா மீன்
  • உப்பு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 பெரிய வெங்காயம்
  • 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 15 பல் பூண்டு
  • 1 தக்காளி
  • புளி
  • 1 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
  • 1 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
  • கறிவேப்பிலை
  • 2 பச்சை மிளகாய்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் மீனை சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் ஊற விடவும்.
  2. வெங்காயத்தை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
  3. பின் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம் சேர்த்து தாளித்து, அரைத்த வெங்காயத்தை சேர்த்து வதக்கி அதனுடன் சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. சிறிது நேரம் கழித்து தக்காளியை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து அதில் சேர்த்து கொள்ளவும்.
  5. பின் அதில் மிளகாய்த்தூள், காஷ்மீர் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு பச்சை வாசனை போக வதக்கவும்.
  6. பின் குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் விட்டு 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். குழம்பின் பச்சை வாசனை போனதும் புளியை ஊற வைத்து அதன் தண்ணீரை சேர்த்து மீண்டும் 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.
  7. குழம்பு நன்கு கொதிக்கும் போது பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பின் ஊற வைத்த மீனையும் சேர்த்து மூடி போட்டு 10 நிமிடங்கள் வரை வேக விடவும். ‌
  8. அவ்வளவுதான் சுவையான காசிமேடு மீன் குழம்பு தயார்.