Summary: தினமும் சிறிதளவு கோவக்காய் எடுத்துக் கொள்வது உடலுக்கு நன்மையை தருகிறது . இந்த கோவக்காயில் இருக்கிற சத்துக்கள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துறதுக்கும் உதவுகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைப்பதற்கும் இந்த கோவக்காய் பயன்படுது. அது மட்டும் இல்லாமல் கல்லீரல்ல இருக்கிற நச்சுத்தன்மையை வெளியேற்றக்கூடிய ஒரு பொருளாவும் இந்த கோவக்காய் பயன்படுகிறது. சிறுநீரக கற்களைகரைக்கும் தன்மை கொண்டது கோவக்காய். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைப்பதால் கோவக்காய் அதிகமாகவே உணவில் எடுத்துக் கொள்ளலாம். இப்போது கோவக்காய் வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.