சூப்பரான மாங்காய் கொத்தமல்லி சாதம் அடுத்தமுறை இப்படி செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Summary: மாங்காய் சீசன் முடிவுற்றாலும் சரி, மாங்காய் மீது இருக்கும் கிரேஸூக்கு குறைச்சலே இல்லை. மாங்காயை எந்த வகையில் கொடுத்தாலும் ருசித்து சாப்பிடும் மக்களுக்கான சூப்பர் டிஷ் இது. மாங்காய் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். காரணம் அதிலிருக்கும் புளிப்பு சுவை தான்.புளிப்பு, காரம் எல்லாம் சேர்த்து சமைத்தால் எப்படி இருக்கும். கண்டிப்பாக அன்றைக்கு உங்க நாவிற்கு விருந்து தான். மாங்காயில் அனைவரும் ஊறுகாய் செய்துதான் பார்த்திருப்போம். எந்த உணவு பொருட்கள் செய்தாலும், அதில் கொத்தமல்லி சேர்த்து சாப்பிட்டால், ருசியாகத்தான் இருக்கும். அப்படி, சுவை மிகுந்த உணவு பொருளான கொத்தமல்லியில் இன்று கொத்தமல்லி மாங்காய் இரண்டும் சேர்ந்து சாதம் செய்வது எப்படி என்பதை காணலாம்.

Ingredients:

  • 2 கப் வேகவைத்த சாதம்
  • 3/4 கப் துருவிய மாங்காய்
  • 1/2 டீஸ்பூன் உளுந்து
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 டேபிள் ஸ்பூன் நெய்
  • 1 வரமிளகாய்
  • உப்பு
  • நறுக்கிய கொத்தமல்லி இலை
  • 1 கப் கொத்தமல்லி இலை
  • 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 4 பச்சை மிளகாய்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலைப் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
  2. பிறகு இதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய் சேர்த்து சுருண்டு வரும் வரை வதக்கி ஆற விடவும்.
  3. பிறகு இவை நன்றாக ஆறிய பிறகு மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  4. பின்னர் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, வரமிளகாய் சேர்த்து தாளித்து, பிறகு துருவிய மாங்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. பிறகு அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி விழுதை இதனுடன் சேர்த்து மிதமான தீயில் நன்றாக வதக்கவும். அதன்பிறகு நெய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  6. வேக வைத்த சாதத்தை இதனுடன் சேர்த்து நன்றாக கலந்து இறுதியாக சிறிது துருவிய மாங்காய் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்.
  7. அவ்வளவுதான் சுவையான மாங்காய்‌ கொத்தமல்லி சாதம் தயார்.