செட்டிநாடு ஸ்டைல் கொத்தவரங்காய் கார குழம்பு இப்படி செஞ்சி பாருங்க! ஒரு சொட்டு குழம்பு மிஞ்சாது!

Summary: தென்னிந்திய சமையல்களில் குழும்புகளுக்கு முக்கிய இடம் உண்டு. ஏனென்றால், ஒரு குழம்பில் பல வகைகள் உள்ளன. உதாரணமாக சாம்பாரில் பருப்பு சாம்பார், முருங்கை சாம்பார், முள்ளங்கி சாம்பார் என பல வகைகள் உள்ளன. இதில் ஆச்சரியமான விடயம் என்னெவன்றால் இவை ஒவ்வொன்றிற்கும் தனித்துவமான சுவையும், ருசியும் உண்டு. செட்டிநாடு என்றாலே பாரம்பரிய உணவுகள் தான் நம் அனைவருக்கும் முதலில் நினைவில் வரும். ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியான குழம்பு, சாம்பார் செய்து அலுத்துப் போய்விட்டதா? அப்படியானால் ஒரு நாள் செட்டிநாடு ரெசிபிக்களை முயற்சி செய்யுங்கள். அதுவும் செட்டிநாடு ஸ்டைல் கார குழம்பு செய்யுங்கள்.

Ingredients:

  • 1/4 கி கொத்தவரங்காய்
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 பெரிய வெங்காயம்
  • புளி
  • 1 தக்காளி
  • 1/2 டீஸ்பூன் கருவேப்பிலை
  • 2 டீஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
  • உப்பு
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1/2 கப் துருவிய தேங்காய்
  • 10 சின்ன வெங்காயம்
  • 1 டீஸ்பூன் சீரகம்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் கொத்தவரங்காயை நன்கு கழுவி நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. புளியை சிறிது நேரம் தண்ணீரில் ஊற‌ வைத்து கரைத்துக் கொள்ளவும்.
  3. பின் மிக்ஸி ஜாரில் தேங்காய், சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கொத்தவரங்காயையும் நீளமாக நறுக்கிய வெங்காயத்தையும், தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  5. இவை நன்றாக வதங்கியதும் அதனுடன் புளி தண்ணீர், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக கொதிக்க விடவும்.
  6. குழம்பு கொதித்துக் கொண்டிருக்கும் போது அரைத்த வைத்த தேங்காயை அதில் ஊற்றி நன்றாக கெட்டியாக வரும் வரை கொதிக்க விடவும்.
  7. குழம்பு கொதித்து கெட்டியானதும் இறுதியாக கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைத்து விடவும்.
  8. அதன்பிறகே கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை தாளித்து குழம்பில் சேர்க்கவும்.
  9. அவ்வளவுதான் சுவையான, அருமையான செட்டிநாடு ஸ்டைல் கொத்தவரங்காய் காரக்குழம்பு தயார்.