ஹோட்டல் சுவையில் கறி உருளை சால்னா  இப்படி செஞ்சு பாருங்க! பார்க்கும் பொழுதே நமக்கு சாப்பிட தோன்றும்!

Summary: கறி, உருளை கிழங்கு சேர்த்து செய்யப்படும்இந்த கறி உருளை சால்னா பரோட்டா மட்டும் அல்லாமல் இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, சாதம்என்று எல்லாவற்றுக்குமே அவ்வளவு அருமையான காம்பினேஷனாக இருக்கம். மட்டன் சால்னா இட்லி, தோசைக்கு கடையில் கொடுப்பது போல உருளை கிழங்கு சேர்த்து  சால்னா ரொம்ப சுலபமாக செஞ்சி கொடுத்தா இன்னும் வேண்டும்வேண்டும் என்று கேட்டு கேட்டு சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு எல்லோருக்கும் பிடித்தஇந்த கறி உருளை சால்னா வீட்டிலேயே ரொம்ப எளிமையாக செய்யலாம்.ரொம்ப ரொம்ப சுலபமாகவீட்டிலேயே ஹோட்டல்ஸ் ஸ்டைலில் கறி உருளை சால்னா எப்படி தயாரிக்கலாம்? என்பதை தான்இந்த பதிவின் மூலம் இனி நாம் பார்க்க போகிறோம்.

Ingredients:

  • 1 கிலோ மட்டன்
  • 1/4 கிலோ வெங்காயம்
  • 1/4 கிலோ தக்காளி
  • 8 பச்சை மிளகாய்
  • 4 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1/2 தேக்கரண்டி தனியா தூள்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 75 மில்லி தயிர்
  • 50 மில்லி எண்ணெய்
  • 1 மேசைக்கரண்டி நெய்
  • உப்பு
  • 3 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 கட்டு கொத்தமல்லி தழை
  • 1/4 கட்டு புதினா
  • 4 மேசைக்கரண்டி தேங்காய்
  • 25 கிராம் முந்திரி
  • 1/2 தேக்கரண்டி கசகசா
  • 1/2 எலுமிச்சை பழம்
  • 1 பட்டை
  • 3 கிராம்பு
  • 2 ஏலக்காய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. மட்டனில் கொழுப்பு மற்றும் ஜவ்வு போன்றவற்றை நீக்கி நன்கு 2 அல்லது 3 முறை தண்ணீரில் கழுவி தண்ணீரை வடிகட்டவும். வெங்கயாம், தக்காளியை நறுக்கி வைக்கவும் கொத்தமல்லி, புதினாவை ஆய்ந்து மண்ணில்லாமல் கழுவி தண்ணீரை வடிக்கவும், முந்திரியை திரித்து அத்துடன் தேங்காய் பொடி சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும். தேங்காய் சேர்ப்பது என்றால் ஒரு சிறிய மூடியும், முந்திரி, கசகசா சேர்த்து மையாக அரைத்து வைக்கவும். உருளைக்கிழங்கை தோலெடுத்து மீடியமாக நறுக்கிக் கொள்ளவும். படத்தில் உருளை வைக்கவில்லை
  2. குக்கர் அல்லது ஒரு வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் , நெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு வெடிக்க விடவும். அதனுடன் வெங்காயத்தை போட்டு தீயை மிதமாக வைத்து வதக்கவும். அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுதை போட்டு 2 நிமிடம் வதக்கி விட்டு இஞ்சி பூண்டின் வாசனை அடங்கி நிறம் மாறும் வரை சிம்மில் வைக்கவும், கொத்தமல்லி, புதினாவில் முக்கால் பாகத்தை சேர்த்து நன்கு வதக்கி ஒரு நிமிடம் சிம்மில் வைத்து மூடி விடவும். பின்னர் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விட்டு 5 நிமிடம் சிம்மில் வைத்து மூடி விடவும்.
  3. பிறகு மிளகாய் தூள், தனியாதூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து மசாலா நன்கு தக்காளியோடு சேரும் வரை கிளறி அதில் மட்டன் மற்றும் தயிர் சேர்க்கவும்.
  4. தீயை குறைத்து வைத்து கிளறி எல்லா மசாலா வகைகளும் கறியில் சேரும்படி ஐந்து நிமிடம் விடவும். கறி மசாலா கலவையில் எலுமிச்சை பழத்தை பிழிந்து விடவும்.  நறுக்கிவைத்திருக்கும் உருளையை சேர்த்து ஒரு முறை கிளறி இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து குகக்ரை மூடி தீயை மிதமாக வைத்து ஐந்து விசில் விட்டு இறக்கவும். வெளியில் சட்டியில் வேக போடுவதாக இருந்தால் 20 நிமிடம் வேக விடவும்.
  5. குக்கர்ஆவி அடங்கியதும் திறந்து வெந்த சால்னாவை வேறு ஒரு வாயகன்ற சட்டிக்கு மாற்றி அரைத்து வைத்துள்ள தேங்காய் முந்திரி கலவையை ஊற்றவும்.
  6. நன்கு தேங்காய் வாசனை அடங்கும் வரை கொதிக்க விட்டு மீதி உள்ள கொத்தமல்லி, புதினாவை சேர்த்து இறக்கவும்.