குக் வித் கோமாளியில் ரோசினி செய்த ஹரியாலி சிக்கன் ரெசிபி இது தான் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!

Summary: சிக்கன் கிரேவி இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. இவை அசைவ பிரியர்கள் மட்டுமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவாக இருக்கிறது என்றால் அது மிகை அல்ல. பஞ்சாபி உணவின் மசாலா நாவை சுண்டி இழுக்கும். ஹரியாலி சிக்கன் என்பது கொத்தமல்லி இலைகள், புதினா இலைகள் மற்றும் பச்சை மிளகாய் போன்ற புளிப்பும் காரமுமான பொருட்களின் கலவையில் ஹரியாலி சிக்கன் மாரினேட் செய்து தயாரிப்பது. இந்த சிக்கன் கிரேவியின் ஸ்பெஷல் என்னவென்றால் பெயரை கேட்டதும் பலரது நாவில் எச்சில் ஊற வைக்கும் சுவை கொண்ட இவை உடம்புக்கு மிகவும் நல்லது.

Ingredients:

  • 250; கி சிக்கன்
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் தயிர்
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 நறுக்கிய பெரிய வெங்காயம்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 3/4 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1/4 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/2 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி
  • 1 கட்டு பாலக்கீரை
  • 1/2 கப் புதினா
  • 1/2 கப் கொத்தமல்லி
  • 3 பச்சை மிளகாய்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் பாலக் கீரையை சிறிது நேரம் வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
  2. பின் மிக்ஸியில் கொத்தமல்லி, பச்சை மிளகாய், வேக வைத்த பாலக்கீரை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  3. அதன்பிறகு சிக்கனை சுத்தமாக கழுவி எடுத்து அதில் தயிர், நாம் அரைத்து வைத்துள்ள விழுது, உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து 30 நிமிடங்கள் வரை ஊற‌ வைக்கவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் வதங்கியதும் ஊற வைத்த சிக்கனை சேர்த்து நன்கு வதக்கி, பின் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, சீரகத்தூள், மல்லி தூள் சேர்த்து கலந்து விட்டு சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
  6. சிக்கன் நன்கு வெந்ததும் கஸ்தூரி மேத்தி சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
  7. அவ்வளவுதான் சுவையான ஹரியாலி சிக்கன் தயார்.