ருசியான மாங்காய் இஞ்சி சாதம் வெறும் 10 நிமிடத்தில் இப்படி செய்து அசத்தலாம் வாங்க!

Summary: மாங்காவை வைத்து எத்தனையோ விதமான உணவுகளை சமைக்கலாம்.மாங்காயை வைத்து வேறு ஒரு விதமாக எப்படி சமைப்பது என்று தெரிந்து வைத்துக் கொள்வோம்.மாங்காய் மலிவாக கிடைகும் போது வாங்கி சுலபமாக இவ்வாறு இஞ்சி சேர்த்து சமைத்து சாப்பிட்டுஇந்த மாங்காய் இஞ்சி சாதம் அருமையாக செய்து பாருங்களேன். சுலபமான முறையில் மாங்காய்இஞ்சி சாதம் எப்படி செய்வது என்பதைப் பற்றியும், மாங்காயுடன் ஒரு இஞ்சி  சேர்த்து கொஞ்சம் வித்தியாசமாக மாங்காய் இஞ்சி சாதம்எப்படி அரைப்பது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Ingredients:

  • 2 கப் அரிசி
  • 1 கப் மாங்காய்
  • 2 டீஸ்பூன் இஞ்சி துருவல்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுந்து
  • 3 பச்சைமிளகாய்
  • கறிவேப்பிலை
  • உப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1/4 டேபிள் ஸ்பூன் தனியா
  • 1/2 தேங்காய்த் துருவல்
  • 2 மிளகாய்
  • 3 டீஸ்பூன் எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. அரிசியை ஊறவைத்து உதிரி உதிரியாக வேகா வைத்து ஆறவைக்கவும். மாங்காயை சுத்தம் செய்து தோல் சீவி தனியாக வைக்கவும்.
  2. முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில், மாங்காய், இஞ்சி துருவல், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு ஆகியவற்றை வதக்கி, கரகரப்பாக அரைத்தெடுங்கள்.
  3. அதன் பின் பொடிக்கக் கூறப்பட்டுள்ளவற்றை சிவக்க வறுத்து பொடியுங்கள். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுந்து. கறிவேப்பிலையை தாளியுங்கள்.
  4. சாதத்தில், அரைத்த விழுது, பொடித்து வைத்துள்ள பொடி, உப்பு, தாளிதக் கலவை, எலுமிச்சம் சாறு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்குங்கள்.