மாலை நேர ஸ்நாக்ஸாக மொறு மொறு வெள்ளை காராமணி வாழைப்பூ வடை இப்படி செஞ்சி பாருங்க!

Summary: வாழைப்பூவில் இருக்குற அதிகப்படியான துவர்ப்புகள் சக்தி பெண்களுக்கு ரொம்ப நல்ல உதவி பண்ணும் பெண்களோடு கர்ப்பப்பை பிரச்சினைகளுக்கு அந்த வாழைப்பூ ரொம்பவுமே உதவியா இருக்கும். ஆகையினால் இந்த காராமணி பயறில் உள்ள ஊட்டச்சத்துகளோடு சேர்த்து வாழைப்பூவும் சாப்பிடும்போது இது மேலும் நல்ல பலன்களை நமக்கு கொடுக்குது. அதனால வெள்ளை காராமணி மற்றும் வாழைப்பூ வடை செய்து சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்திற்கு மேலும் வலுப்படுத்திக் கொள்ளலாம். இந்த காராமணி வாழைப்பூ வடை ரொம்ப சுவையானதாக இருக்கும் நீங்க வெள்ளை காராமணி இல்லனா பிரவுன் கலர் காராமணி ரெண்டு காராமணியிலிருந்து செய்யலாம். எந்த காராமணியில வேணும்னாலும் இந்த வடையை நீங்க செய்து கொள்ளலாம். காராமணியை கொஞ்ச நேரம் ஊற.வைத்து பிறகுவடை செய்யனும்  காரணம்என்னன்னா இருக்கும் நாம ஊற வைத்து அரைக்கும்போது தான் நமக்கு உபரி அதிகமா கிடைக்கும் . சரி வாங்க இந்த வெள்ளைக்கார மணி வாழைப்பூ வடை எப்படி செய்யறது அப்படின்னு பார்க்கலாம்.

Ingredients:

  • 1 கப் வெள்ளைக் காராமணி
  • 1/2 கப் வாழைப்பூ
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 2 ஸ்பூன் துருவிய தேங்காய்
  • 2 சிட்டிகை பெருங்காயத் தூள்
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் காராமணியை நீரில் 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவேண்டும். வாழைப்பூவை நரம்பு நீக்கி பொடியாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.
  2. பின்னர் காராமணியை  நன்குகழுவி மிக்ஸி ஜாரில் போட்டு அத்துடன், காய்ந்த மிளகாய், சோம்பு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
  3. பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி கொள்ள வேண்டும். அந்த மாவில் பொடியாக நறுக்கிய வாழைப்பூ, பெருங்காயத் தூள்,  பொடியாகநறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து, கறிவேப்பிலையும் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
  4. பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள கலவையை உருண்டைகளாக பிடித்து லேசாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  5. பொரித்து எடுத்த வடைளை ஒரு தட்டில்வைத்து பரிமாறினால் சூடான சுவையான சத்து மிக்க காராமணி வாழைப்பூ வடை தயார்.