சுவையான பச்சை பட்டாணி தோசை செய்வது எப்படி ?

Summary: நீங்கள் வழக்கமாக எப்போதும் போல் தோசை சுடாமல் வேறு ஒரு நிறத்தில் சுவையான தோசை செய்ய விரும்பினீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த பச்சை பட்டாணி தோசை செய்து பாருங்கள் இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். நீங்கள் எப்பொழுதும் போல் ஒரே மாதிரியான தோசை சுடுவதற்கு இந்த பச்சை பட்டாணி தோசை உங்களுக்கு ஒரு மாறுதலாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இந்த தோசை இருக்கும். குறிப்பாக குழந்தைகள் என்றால் இன்னும் இரண்டு தோசை கூட கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இந்த பச்சை பட்டாணி தோசை வண்ணமயமாக, சுவைக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கும் இந்த பச்சை பட்டாணி தோசை.

Ingredients:

  • 4 கப் இட்லி மாவு
  • 1 கப் பட்டாணி
  • 3  பச்சை மிளகாய்
  • 3 துண்டு இஞ்சி
  • 1 கைப்பிடி கொத்த மல்லி
  • 1 tbsp சீரகம்
  • 2 tbsp தண்ணீர்
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்
  • 1 தோசை கல்

Steps:

  1. முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் அளவிலான பச்சை பட்டாணி சேர்த்து அதனுடன் மூன்று பச்சை மிளகாய், 3 துண்டு இஞ்சி, ஒரு கைப்பிடி கொத்த மல்லி இலை, ஒரு டீஸ்பூன் சீரகம், 2 டீஸ்பூன் அளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  2. பின்பு ஒரு பெரிய பவுலில் நான்கு கப் அளவில் ஆன இட்லி மாவு எடுத்து அதனுடன் நாம் மிக்ஸியில் அரைத்த விழுதை சேர்த்துக் கொள்ளுங்கள். பின் தோசை மாவு பதத்திற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள்.
  3. பின் வழக்கம் போல் தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி ஒரு கரண்டி மாவை எடுத்து வட்டமாக ஊற்றி விடுங்கள் பின் அதன் மேல் துருவிய கேரட், சிறிது வெங்காயம் தூவி ஒரு மூடியை வைத்து மூடி விடுங்கள்.
  4. பின் இருபுறமும் தோசையை நன்றாக வேக வைத்து விடுங்கள். இவ்வாறாக மீதம் இருக்கும் மாவை தோசை சுட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான பச்சை பட்டாணி தோசை இனிதே தயாராகி விட்டது.