நீங்களே அசந்து போகும் அளவுக்கு இந்த தந்தூரி சிக்கன் இருக்கும்! ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க!

Summary: குழந்தைகள்பார்க்கும் போதே கண்ணை பறிக்குமளவில் இருக்கும் இந்த தந்தூரி சிக்கன் . வீட்டில் செய்தால்அதிக சுவையூட்டிகள் மற்றும் ரசாயன நிறம் சேர்க்காமல் செய்யலாம். இங்கு செய்முறையில்உணவு சாயங்களில் பெரிதாக இல்லை,  ஆனால் இந்தசெய்முறையில் தந்தூரி சிக்கன் செய்தலும் அதே பிரகாசமான சிவப்பு நிறமாக இருக்கும்.  தந்தூரி சிக்கன் செய்ய தந்தூர் அடுப்பு தேவையில்லை!  ஒரு கிரில்லில்  அல்லது பிராய்லர் கொண்ட அடுப்பில் சமைக்கலாம்.

Ingredients:

  • 1/2 கிலோ சிக்கன்
  • 175 மில்லி தயிர்
  • 1 சிட்டிகை சிகப்பு புட் கலர்
  • 1 எலுமிச்சம் பழம்
  • 1 தேக்கரண்டி வறுத்து அரைத்த தனியா
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 1 தேக்கரண்டி அரைத்த இஞ்சி மற்றும் பூண்டு
  • மிளகாய்த்தூள்
  • மிளகுத்தூள்
  • உப்பு

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 கிரில்

Steps:

  1. கோழி இறைச்சியில் தோலுரித்து நான்கு துண்டுகளாக்க வேண்டும்.கூரிய கத்தியை கொண்டு ஒவ்வொரு துண்டிலும் 2, 3 இடங்களில் கீறி விடலாம்.
  2. வறுத்து அரைத்த தனியா, சீரகம் மற்றும் அரைத்த இஞ்சி, பூண்டு, மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு ஆகியவற்றை இறைச்சியில் பூசி தந்தூரி கலர் பொடி, தந்தூரி மசாலா கலந்து தயிருடன் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
  3. மறுநாள் தந்தூரி ஓவன் அல்லது கம்பி வலை அடுப்பு மீது வைத்து தணலில் 15 முதல் 20 நிமிடங்களுக்கு வாட்டி எடுக்கவும்.
  4. பின்னர் எலுமிச்சம் பழத்தை வாட்டப்பட்ட இறைச்சி மீது பிழிந்துவிட்டு சூடான தந்தூரி சிக்கனை பரிமாறவும்.
  5. தந்தூரி சிக்கன் ரெடி.