குக் வித் கோமாளியில்‌ ஷ்ருத்திகா செய்த குளு குளு முள்ளங்கி ஐஸ்கிரீம் ரெசிபி இதோ!

Summary: ஐஸ்கிரீம் வயது வரம்பின்றி அனைவருக்கும் விருப்பமானது. கோடையை சமாளிக்க ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்கள் ஒரு புறம் இருக்க, மறுபுறம் மாம்பழங்களை சாப்பிட கோடையை வரவேற்பவர்களுக்கு இருக்க தான் செய்கிறார்கள். இன்றைய பதிவில் முள்ளங்கியை கொண்டு செய்யப்படும் சுவையான முள்ளங்கி ஐஸ்கிரீம் எப்படி செய்வதென்று தான் பார்க்கப் போகிறோம். எந்த வித செயற்கை நிறமோ, சுவையூட்டியோ சேர்க்காமல் வெறும் 3 பொருட்களை வைத்து, இனி வீட்டிலேயே சுலபமாக ஐஸ்கிரீம் செய்து சாப்பிடலாம். தோணும் போதெல்லாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே அதை செய்யலாம்.

Ingredients:

  • 3 சிகப்பு முள்ளங்கி
  • 1/4 கப் சர்க்கரை
  • 1/2 கப் ஃப்ரெஷ் கிரீம்
  • 1/4 கப் கன்டென்ஸ்டு மில்க்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் முள்ளங்கியை தோல் சீவி, நறுக்கி பின் நன்கு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. பின் அதனை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  3. பின் கடாயை அடுப்பில் வைத்து அரைத்த முள்ளங்கி மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு வதக்கவும். முள்ளங்கியின் பச்சை வாசனை போனதும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற‌விடவும்.
  4. பின்னர் ஒரு பவுளில் ஃப்ரெஷ் கீரீம் மற்றும் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும். நல்ல கீரிமீயான பதம் வரும் வரை நன்கு பீட்‌ செய்யவும்.
  5. பின்னர் அதில் அரைத்த முள்ளங்கியை சேர்த்து மற்றொரு முறை நன்கு பீட் செய்துக் கொள்ளவும்.
  6. இப்பொழுது நாம் ரெடி செய்து வைத்துள்ள கீரீமை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து ஒரு பேப்பரால் மூடி பிரிட்ஜில் 4 முதல் 5 மணி நேரம் வைத்து விடுங்கள்.
  7. பின்னர் அதனை வெளியே எடுத்து பரிமாறவும் போது நறுக்கிய பாதாம், முந்திரி, குங்குமப் பூ சேர்த்து பரிமாறவும்.
  8. அவ்வளவுதான் சுவையான சிகப்பு முள்ளங்கி ஐஸ்கிரீம் தயார்‌.