கடலைப்பருப்பு போட்டு பீர்க்கங்காய் பொரியல் ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க!

Summary: பீர்க்கங்காயில் உள்ள அதிக அளவு வைட்டமின்கள், தாது உப்புக்கள் இருக்கின்றன. பீர்க்கங்காய் நார்ச்சத்தும் நீர் சத்தும் அதிக அளவில் இருக்கின்றது. பீர்க்கங்காய் இலையின் சாறு நீரிழிவு நோயை கட்டுப்படுத்த பயன்படுகிறது. பீர்க்கங்காய் சாறு மஞ்சள் காமாலையை குணப்படுத்த பயன்படுத்தப்படுகின்றது. இதில் உள்ள தாது உப்புக்கள் நோய் தொற்றுக்களை குறைக்கின்றது. நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கின்றது. இதில் இரும்புச் சத்து தாது உப்புக்கள் மக்னீசியம் போன்றவை இருக்கின்றன.

Ingredients:

  • 2 பீர்க்கங்காய்
  • 2 ஸ்பூன் கடலைப் பருப்பு
  • 1 வெங்காயம்
  • 4 பச்சைமிளகாய்
  • 1 கப் தேங்காய் துருவல்
  • 1 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • எண்ணெய்
  • 1/2 ஸ்பூன் கடுகு
  • 1/2 ஸ்பூன் உளுந்து
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 சிட்டிகை பெருங்காயம்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 குக்கர்

Steps:

  1. முதலில் பீரக்கங்காயை நீரில் கழுவிவிட்டு தோலை  நீக்கிவிட்டு சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும்.கடலைப்பருப்பை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பின் ஒரு கடாயில் நீரை ஊற்றி மஞ்சள்தூள் சேர்த்து ஊற வைத்த கடலைப்பருப்பைசேர்த்து மூட் போட்டு வேக வைக்கவும்.
  3. கடலைப் பருப்பை ஊற வைக்க மறந்திருந்தால் குக்கரில் சேர்த்து 3 விசில் வரும்வரை வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
  4. கடலைப்பருப்பை நசுக்கி பார்த்தால் நன்றாக மைய நசுங்க வேண்டும்.பின் ஒரு வானெலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து , கறிவேப்பிலை,  பச்சைமிளகாய்சேர்த்து வதக்கவும்.
  5. பொடியாக நறுக்கிய வெங்காயம்  சேர்த்துபொன்னிறமாகும் வரை வதக்கவும். பின் நறுக்கிய பீர்க்கங்காயை  வானெலியில்  சேர்த்துநன்றாக வதக்கி மூடி போட்டு மீடியம் ஃப்லேமில் வேக வைக்கவும்.
  6. நீர் சேர்க்க தேவையில்லை பீர்க்கங்காயில் உள்ள நீரிலேயே வெந்து வரும் அவ்வப்போது திறந்து கிளறி விடவும். பீர்க்கங்காய் அறை பதத்திற்கு வெந்ததும் வேக வைத்த கடலைப்பருப்பை சேர்த்து கிளறிவிடவும்.
  7. பீர்க்கங்காய் நீர் வற்றி நன்றாக வெந்ததும்  துருவியதேங்காய் சேர்த்து நன்றாக கலந்து  விட்டுவேறு பாத்திரத்தில் மாற்றி பரிமாறினால் சூடான சுவையான சத்து மிக்க பீர்க்கங்காய் பொரியல் தயார்.