தாபா ஸ்டைல் புளிச்சக்கீரை பன்னீர் மசாலா குழம்பு இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் சுவையே தனி தான்!

Summary: வளர்கின்ற குழந்தைகளுக்கு புரதச்சத்து மிகவும்அவசியம் தேவைப்படுகிறது. அது பன்னீர், பட்டர் இது போன்ற உணவுகளில் அதிக அளவு நிறைந்திருக்கிறது.இதனை குழந்தைகள் சாப்பிட அவர்கள உடல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் முழுவதுமாககிடைக்கிறது. ஆனால் சுவையை மட்டுமே விரும்பும் குழந்தைகளுக்கு இதனை புளிச்சக்கீரை சேர்த்து  தாபாவில் சேர்க்கப்படும் மசாலாவை சேர்த்து அதே சுவையில்செய்து கொடுத்தால் சலிக்காமல், தட்டாமல் விருப்பமாக சாப்பிடுபவர்கள். இந்த பதிவில்குறிப்பிட்டுள்ளபடி சரியான பக்குவத்தில், இதே முறையில் செய்தால் தாபாவில் செய்யும்அதே சுவையில் புளிச்சக்கீரை பன்னீர்  மசாலாவைநீங்களும் சுலபமாக செய்யலாம். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின்மூலம் தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 1 கட்டு புளிச்சக்கீரை
  • புளி
  • 1 டேபிள்ஸ்பூன் மிளகாய் பொடி
  • 1 டேபிள்ஸ்பூன் தனியா பொடி
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் பொடி
  • 4 பச்சை மிளகாய்
  • 2 மிளகாய் வற்றல்
  • 2 டீஸ்பூன் கசகசா
  • 1 கப் தேங்காய் துருவல்
  • 4 தக்காளி
  • 100 கிராம் பன்னீர்
  • வெந்தயம்
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. புளியை தேவையான தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். புளிச்சக்கீரையை ஆய்ந்து கொள்ளவும். சிறிது எண்ணெயில் கசகசாவை வறுத்து அதனோடு தேங்காய் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
  2. அடுத்து கீரை, தக்காளி சேர்த்து வதக்கவும். வதக்கிய எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு அரைத்து புளித் தண்ணீரில் உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.
  3. குழம்பில் மிளகாய் பொடி, தனியா பொடி, மஞ்சள் பொடி, சேர்க்கவும். பன்னீரை விரல் போல் இரண்டங்குல நீளத்தில் நறுக்கி தண்ணீரில் அலசி விட்டுப் பிழிந்து சிறிது எண்ணெயில் சிவக்க வறுக்க வேண்டும்.
  4. கடாயில் மீதி எண்ணெயைக் காய விட்டு வெந்தயம், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து குழம்பைச் சேர்த்து மூடி கொதிக்க விட வேண்டும்.
  5. கொதித்து பொடி வாசனை அடங்கியதும் பொரித்து வைத்துள்ள பன்னீரை சேர்த்துக் கிளறி இறக்கி கொத்தமல்லி தூவ வேண்டும். சுவையான புளிச்சக்கீரை பன்னீர் மசாலா குழம்பு தயார்.
  6. இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள்: சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை, அடை, ஆப்பம், பொங்கல்.