வீடே கமகமக்கும் புதினா இறால் கிரேவி இப்படி செஞ்சி பாருங்க பார்த்தாலே நாவில் எச்சி ஊறும்!

Summary: அசைவ வகைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையில் இருக்கும் அதிலும் இந்த இறாலுக்கென்று தனியாக ஒரு சுவையைஉண்டு இறால் பிடிக்காது என்று சொல்பவர்கள் யாரும் இருக்கவே மாட்டார்கள் குழந்தை முதல்பெரியவர் வரை இறால் என்றால் நிச்சயமாக நாக்கில் எச்சில் ஊறும் அந்த அளவிற்கு சுவையாகஇருக்கக்கூடிய பொருள் உணவு. புதினா இறால் கிரேவி இது பெரும்பாலும்ரொட்டி, பராத்தா போன்ற பிளாட்பிரெட் அல்லது வேகவைத்த சாதம், புலாவ், ஜீரா ரைஸ் போன்றரைஸ் ரெசிபிகளுடன் ருசிக்கப்படுகிறது

Ingredients:

  • 200 கிராம் இறால்
  • 1 சிறிய கட்டு புதினா
  • 1/2 கட்டு கொத்தமல்லி
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி
  • 2 வெங்காயம்
  • 2 பற்கள் பூண்டு
  • 2 பச்சை மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி
  • 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
  • 100 மி.லி தேங்காய் பால்
  • 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • உப்பு
  • எண்ணெய்
  • 1 1/2 கப் தண்ணீர்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. இறாலை நன்கு கழுவி, அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  2. பின்னர் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகப் பொடி, மல்லி பொடி இஞ்சி, பூண்டு மற்றும் 1 வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  3. பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
  4. பின் அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட்டு, தேங்காய் பாலை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 5நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
  5. பின்பு ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து. 5 நிமிடம் வேக வைத்து, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, இறால் வெந்ததும், தீயை அணைத்து இறக்கி விட வேண்டும்.
  6. இப்போது சுவையான புதினா இறால் குழம்பு தயார். இதனை சாதத்துடன் சாப்பிடலாம். கொஞ்சம் ட்ரை ஆக்கி சைடு டிஷ் ஆகவும் சாப்பிடலாம்.