குக் வித் கோமாளியில் ஷெரின் செய்த மாம்பழ பிர்னி ரெபிசி இதோ! நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!

Summary: பிர்னி என்பது பாஸ்மதி அரிசியுடன் தயாரிக்கப்பட்ட ஒரு கெட்டியான மற்றும் கிரீம் புட்டு ஆகும். இந்த மாம்பழ பிர்னி செய்முறையானது வழக்கமான பிர்னிக்கு மிகவும் பொதுவான மாறுபாடுகளில் ஒன்றாகும். மாம்பழ பிர்னி என்பது அரிசி புட்டு மற்றும் தூய மாம்பழங்களால் செய்யப்பட்ட ஒரு சுவையான இந்திய இனிப்பு ஆகும். அரிசி நன்கு அரைக்கப்பட்டு, பால், குங்குமப்பூ தூள் மற்றும் பல்வேறு பொருட்களுடன் சேர்த்து செய்யப்படுகிறது. வட இந்தியா முழுவதும், குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவில், திருமணங்கள், பண்டிகைகள் அல்லது எந்த சிறப்பு கொண்டாட்டங்களிலும் இந்த இனிப்பு மிகவும் பிரபலமானது.

Ingredients:

  • 1/4 கப் பாசுமதி அரிசி
  • 1/2 லிட்டர் பால்
  • 1/4 கப் சர்க்கரை
  • 2 மாம்பழம்
  • 1/2 டீஸ்பூன் குங்குமப் பூ
  • 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரி

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  2. அரை மணி நேரம் கழித்து அரிசியை ஒரு துணி விரித்து நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  3. பின் காய்ந்த அரிசியை ஒரு‌ மிக்ஸியில் சேர்த்து மைய அரைத்து விடாமல், ரவை பதத்திற்க்கு அரைத்து தனியே வைத்துக் எடுத்துக் கொள்ளவும்.
  4. மாம்பழத்தை நன்கு கழுவி விட்டு தோல் சீவி மிக்ஸியில் சேர்த்து நன்கு பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.
  5. அதன்‌பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து பால் ஊற்றி நன்கு காய்ச்சிக் கொள்ளவும்.
  6. பால் கொதித்ததும் அரைத்து வைத்திருக்கும் அரிசியை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  7. சிறிது நேரம் கழித்து பால் நன்கு கெட்டியானதும் அரைத்து வைத்த மாம்பழம், சர்க்கரை, ஏலக்காய்த்தூள் மற்றும் குங்குமப் பூ சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  8. இது சிறிது கெட்டியானதும் நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். இது நன்கு ஆறியவுடன் சின்ன சின்ன கப்பிற்கு மாற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விடவும்.
  9. இது நன்கு செட் ஆனதும் வெளியே எடுத்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான மாம்பழ பிர்னி தயார்.