மொறு மொறு, காரசாரமான பாகற்காய் சிப்ஸ்! ஒருவாட்டி உங்க வீட்டுல இப்படி செஞ்சு பாருங்க!!!

Summary: சிப்ஸ் வகைகள் என்றாலே எல்லோரும் கடைகளில்வாங்கி சாப்பிடுவதை தான் வழக்கமாக வைத்திருப்போம். அது எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கும்என்று உறுதியாக சொல்லிவிட முடியாது. நம்முடைய குழந்தைகளுக்கு, நான்கு நாட்களுக்கு தேவையானபாகற்காய் சிப்ஸ் , நம் வீட்டிலேயே தயாரித்து சேகரித்து வைத்துக் கொள்ளலாம். வாரம்ஒருமுறை இந்த பாகற்காய் சிப்ஸை செய்து, அனைத்து விதமான சாதத்திற்கு, அல்லது ஸ்னாக்ஸ்ஆகவோ சாப்பிடலாம் , உறவினர்களுக்கும் கொடுக்கலாம். சுவையான, சுலபமான, காரசாரமான பாகற்காய்சிப்ஸ் எப்படி செய்வது என்று பார்த்து விடலாமா?

Ingredients:

  • 2 பெரிய பாகற்காய்
  • 1 மே.கரண்டி. மிளகாய் தூள்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள்தூள்
  • உப்பு
  • 1 மே.கரண்டி. அரிசி மாவு அல்லது கார்ன்ஃப்ளார்
  • 1/2 தேக்கரண்டி கரம் மசாலாத் தூள்
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. பாகற்காயை மெல்லிய வட்டமாக நறுக்கி அதில் மிளகாய்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, சேர்த்து விரவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பிறகு இதில் அரிசி மாவு அல்லது கார்ன்ஃப்ளார் சேர்த்து சிறுது தண்ணீர் தெளித்து கைகளை வைத்து பிரட்டி மீண்டும் ஒரு ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  3. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் பிரட்டி வைத்த பாகற்காயினை பொறித்து எடுக்கவும்.
  4. சுவையான கசப்பில்லாத பாகற்காய் சிப்ஸ் ரெடி.