மலபார் ஸ்டைலில் நெய் சோறு செய்வது எப்படி ?

Summary: இன்று நாம் கேரளாவில் செய்யப்படும் மலபார் நெய் சோறு பற்றி தான் பார்க்க இருக்கிறோம் அதுவும் அட்டாசமான சுவையில் இருக்கும் எந்த அளவுக்கு என்றால் நாம் சாப்பிட சாப்பிட சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் அந்த அளவிற்கு நமக்கு சுவையை தரும். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் பெரியோர்களுக்கு கூட ஒரு பிடித்தமான உணவாக இது மாறி போதும். அதனால் இன்று இந்த மலபார் நெய் சோறு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 1 துண்டு இஞ்சி
  • 3 பல் பூண்டு
  • 3 பச்சை மிளகாய்
  • 300 கிராம் பாஸ்மதி அரிசி
  • 6 tbsp நெய்
  • 10 முந்திரி பருப்பு
  • 10 உலர் திராட்சை
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 பட்டை
  • 2 நட்சத்திர சோம்பு
  • 2 ஏலக்காய்
  • ½ பெரிய வெங்காயம்
  • 2 கிளாஸ் தண்ணீர்
  • உப்பு
  • 1 கேரட்
  • 3 பீன்ஸ்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் 300 கிராம் அளவு பாஸ்மதி அரிசியை ஒரு பெரிய பவுளில் தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி, மூன்று பல் பூண்டு சேர்த்து அரைத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் தயார் செய்து கொள்ளவும்.
  2. அதன் பின் ஒரு கடாயில் இரண்டு டீஸ்பூன் அளவு நெய் ஊற்றி அதில் நாம் வைத்திருக்கும் 10 முந்திரி பருப்புகளை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்து கொண்டு தனியாக ஒரு பவுளில் வைத்துக் கொள்ளவும். பின் அதே கடாயில் உலர் திராட்சையை சேர்த்து நன்றாக வறுத்து முந்தைய பருப்புடன் சேர்த்து கொள்ளவும்.
  3. அதன் பின் மீண்டும் அதே கடாயில் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் நீளவாக்கில் நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயங்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு அதே கடாயில் அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் அளவு நெய் ஊற்றி கொள்ளவும்.
  4. பின் நெய் காய்ந்ததும் அதில் இரண்டு பட்டை, இரண்டு நட்சத்திர சோம்பு, இரண்டு ஏலக்காய் சேர்த்து தாளித்து விட்டு அதனுடன் பாதி பெரிய வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன் நாம் வைத்திருக்கும் பாஸ்மதி அரிசி சேர்த்து இரண்டு கிளாஸ் தண்ணீர் சேர்த்து கடாயை மூடி வைத்து ஒரு பத்து நிமிடம் நன்றாக வேக வைத்துக் கொள்ளுங்கள்.
  5. அதன் பின் இதோடு நாம் நறுக்கி வைத்திருக்கும் கேரட் மற்றும் பீன்ஸ் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள் பிறகு மறுபடியும் கடாயை மூடி வைத்துவிட்டு ஒரு ஐந்து நிமிடம் கழித்து நன்கு கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.
  6. பின்பு நாம் ஏற்கென வறுத்து வைத்திருக்கும் முந்திரிப்பருப்பு, உலர் திராட்சை, வறுத்த வெங்காயங்களை நெய் சோறின் மேல் தூவி விட்டு கடைசியாக இரண்டு டீஸ்பூன் அளவு நெய் ஊற்றிக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான மலபார் நெய் சோறு இனிதே தயாரிகிவிட்டது ஆகிவிட்டது.