குளு குளுனு 90'Kids தேங்காய் பால் குச்சி ஐஸ் அடுப்பு பக்கமே போகாம சுலபமாக இப்படி செய்து பாருங்க!

Summary: ஐஸ் ஐஸ் ஐஸ் பால் ஜஸ் , சேமியா ஐஸ் 90ஸ் கிட்ஸோட பிடித்தமானசத்தம் அப்படினு சொல்லலாம். இப்பல்லாம் என்னதான் சாக்கோபார் வந்தாலும் கோனைஸ் கிரிம் வந்தாலும் கார்னடோஸ் வந்தாலும் எப்பவுமே குச்சி ஐஸ் பெஸ்ட்  ஐஸ்தான். இதெல்லாம் வந்து எல்லாருக்குமே ரொம்ப ஃபேவரட்டான ஒரு ஐஸ். இப்போ அந்த ஐஸ் எல்லாம் ரொம்ப அரிதாக தான் கிடைக்குது. இருந்தாலும் இந்த மாதிரி ஐஸ்கிரீம்கள் அழிந்து வருவதை தடை பண்றதுக்காக வீட்டிலேயே சுவையான தேங்காய் சேமியா.ஐஸ்  பண்ணிசாப்பிட போறோம். இத நீங்க ஆல்ரெடி செய்து ஃப்ரீசர்ல வச்சிருந்தீங்கன்னா உங்க வீட்டுக்கு கெஸ்ட் வராங்க அப்படின்னா அவங்களுக்கு வந்த உடனே நீங்க அழகா எடுத்து கொடுத்து டேஸ்ட் பண்ண சொல்லலாம். இந்த குச்சி ஐஸ் எப்படி பண்றது அப்படின்னு பாக்க போறோம்.

Ingredients:

  • 4 ஸ்பூன் பால் பவுடர்
  • 4 ஸ்பூன் பொடித்த சக்கரை
  • 1 மூடி தேங்காய்
  • 1 ஸ்பூன் பால்

Equipemnts:

  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் தேங்காயை சில்லுகளாக கீறி எடுத்து கொள்ள வேண்டும்.தேங்காய் சில்லுகளுக்கு பின் புறம் இருக்கும் கருப்பு நிற தோலை நீக்கி விடவும்.
  2. தேங்காய் சில்லுகளை பொடியாக நறுக்கி  எடுத்துகொள்ள வேண்டும்.நறுக்கிய தேங்காயை மிக்ஸி ஜாரில் சேர்த்து உடைத்த தேங்காயில் உள்ள நீரை சேர்த்து நன்றாக மாவு போல் அரைத்து கொள்ளவும்.
  3. பிறகு ஒரு பாத்திரத்தில் பால் பவுடர் பொடித்த சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை அளவு உங்கள் விருப்பம் போல் சேர்த்து கொள்ளவும்.
  4. பின் 12 கப் பாலை சேர்த்து நன்றாக கட்டி இல்லாமல் கலந்து விடும்.பின் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்றாக கட்டி இல்லாமல் கலந்துவிடும்.
  5. பின்  ஐஸ் மோல்டுகளில் கலந்து வைத்துள்ள தேங்காய் பால் கலவையை ஊற்றி மோல்டுகளை மூடி ஃபிரீசரில் 7 முதல் 8 மணி நேரம் வைத்து எடுக்கவும்.
  6. இரவில் தயார் செய்து  ஃபிரீசரில்வைத்தால் காலையில் எடுத்து சுவைக்க தாயாராக இருக்கும். குளு குளு குச்சி ஐஸ் தயார்.