Summary: செட்டிநாடு உணவுகளின் சுவை சைவ பிரியர்களுக்கும் சரி, அசைவ பிரியர்களுக்கும் சரி மிகவும் பிடித்தமான ஒன்று. செட்டிநாடு உணவின் மசாலா நாவை சுண்டி இழுக்கும். சைவத்திலும் காரக்குழம்பு, கூட்டு, மசியல், பொரியல், துவையல், பிரட்டல், பருப்பு உருண்டை குழம்பு என ஏராளமான பிரத்தியேக செட்டிநாடு உணவுகள் உள்ளன. தமிழகத்தில் காரைக்குடி, தேவகோட்டை, புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் செட்டிநாடு உணவுகள் சமைக்கப்படுகின்றன. பல வகையான மசாலாப் பொருட்களை ஃபிரஷாக அரைத்து சமையலில் பயன்படுத்துவது இந்த உணவின் தனித்துவம். அந்த வகையில் இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போவது குக் வித் கோமாளியில் சிருஷ்டி செய்த செட்டிநாடு ஸ்பெஷல் வெஜ் கிரேவி.