மதிய உணவுக்கு ருசியான முள்ளங்கி பொரியல் இனி இப்படி செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

Summary: முள்ளங்கியை மோருடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து ஜூஸாக பருக்கும் பொழுது சிறுநீரகத்தில் உள்ள கல்கள் எல்லாம் சரியாகின்றன. முக்கியமான உறுப்புகளை சரி செய்யும் முள்ளங்கியில் பொரியல் எப்படி செய்வது என்று பார்க்க இருக்கிறோம். இப்படிப்பட்ட முள்ளங்கியை குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் உணவில் சேர்த்துக் கொள்வதற்கு தயங்குவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த முள்ளங்கியை பொரியலாக செய்து கொடுக்கும் பொழுது வித்தியாசமான சுவையில் மிகவும் விருப்பமாக உண்ணுவார்கள். இந்த முள்ளங்கி  பொரியலைசாம்பார், புளிக்குழம்பு, வத்தல் குழம்பு,ரசம், தயிர்சாதம் போன்றவற்றிற்கு உண்ணலாம். அருமையான சுவையில் எப்போதும் உண்பதை விட சற்று அதிக உணவை எடுத்து கொள்வோம். சுவையான ஆரோக்கியமிக்க முள்ளங்கி பொரியல் எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 1/4 கிலோ முள்ளங்கி
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 3 பச்சை மிளகாய்
  • 4 பல் பூண்டு
  • 12 கப் துருவிய தேங்காய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1/2 கப் வெங்காயம்
  • 1 ஸ்பூன் வெங்காயம்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் முள்ளங்கியை தோல் சீவி எடுத்து கழுவி வைத்து கொள்ளவும்.கழுவிய முள்ளங்கியை சதுர வடிவில் பொடியாக நறுக்கவும். ஒரு கடாயில் நறுக்கிய முள்ளங்கி சேர்த்து முள்ளங்கி மூழ்கும் அளவிற்கு நீர்விட்டு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
  2. ஒரு மிக்ஸி ஜாரில்  சீரகம்,பச்சைமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, மஞ்சள்தூள், தேங்காய் துருவல் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொர கொரப்பாக அரைக்கவும்.
  3. பின் வேக வைத்த முள்ளங்கியில் தண்ணீர் முழுவதும் வற்றி முள்ளங்கி நன்றாக வெந்ததும் தனியே எடுத்து வைக்கவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  4. பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கி கொள்ளவும். அதில் கொர கொரப்பாக அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை கடாயில் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  5. தேங்காய் கலவையில் பச்சை வாசனை போனவுடன் வேக வைத்த முள்ளங்கியை சேர்த்து நன்றாக கிளறவும்.தேங்காய் கலவையோடு நன்றாக கலந்து வெந்த பிறகு சூடாக பரிமாறினால்  சுவையானஆரோக்கியமிக்க முள்ளங்கி பொரியல்  தயார்.