ஒரு பக்காவான டிபன் பாக்ஸ் ரெசிபி பன்னீர் ப்ரைடு ரைஸ் இப்படி செஞ்சி பாருங்க!

Summary: தினமும் சாம்பார், ரசம், கூட்டு சாப்பிட்டு போர் அடிக்குதா? குழந்தைகள் வேறு ஏதாவது புதிதாக செய்து கொடுங்கள் என்று கேட்கிறார்களா? பிரைட் ரைஸ் செய்து கொடுங்களேன். இது சமைப்பதும் சுலபம், ருசியும் அதிகம். சிக்கன் ப்ரைடு ரைஸ், எக் ப்ரைடு ரைஸ் போன்றவை பலருக்கும் பிடித்தமானவை. உண்மையில் இந்த இரண்டையும் விட பன்னீர் பிரைட் ரைஸ் மிகவும் சுவையாக இருக்கும். வீட்டில் சமைப்பதும் மிகவும் எளிது. ஒருமுறை செய்து சாப்பிட்டால், மீண்டும் மீண்டும் சமைக்க வைக்கும். குழந்தைகளுக்கும் அது மிகவும் பிடிக்கும்.

Ingredients:

  • 150 கி பன்னீர்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் மிளகுத்தூள்
  • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  • உப்பு
  • 1 கேரட்
  • 1 குடைமிளகாய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 100 கி பீன்ஸ்
  • 100 கி முட்டைகோஸ்
  • 1 துண்டு இஞ்சி
  • 4 பல் பூண்டு
  • 4 பச்சை மிளகாய்
  • 1 கப் வேகவைத்த சாதம்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 வாணலி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் பன்னீரை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதில் மிளகாய் தூள், மிளகு தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கலந்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
  2. பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்த பன்னீரை பொரித்து எடுக்கவும்.
  3. அதன்பிறகு முட்டைக்கோஸ், வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய், பீன்ஸ், கேரட் போன்ற காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  4. ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய் சேர்த்து, பின் நறுக்கிய கேரட், முட்டைகோஸ், பீன்ஸ், குடைமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
  6. காய்கறிகள் சிறிது வதங்கியதும் பின்னர் வேகவைத்த சாதத்தை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  7. அதில் மிளகு தூள், கரம்மசாலா தூள் சேர்த்து கிளறி விடவும். பின் வறுத்த பன்னீரை சேர்த்து கலந்து விட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
  8. விருப்பப்பட்டால் வெங்காயத்தாள்‌ மேல் தூவி நன்கு கலந்து விட்டு, வேறொரு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்.
  9. அவ்வளவுதான் சுவையான பன்னீர் பிரைடு ரைஸ் தயார்.