சிறுகீரை உருண்டை குழம்பு செய்து கொடுத்தால், ஒரு சட்டி சாதமும் நொடிப்பொழுதில் தீர்ந்து விடும்!

Summary: மதிய உணவிற்காக ஏதாவது குழம்பு வகையை செய்துஅதற்கு தொட்டுக்கொள்ள காய்கறி பொரியல் அல்லது வற்றல் இவ்வாறு எதையாவது செய்யவேண்டும்.ஒரு சில நேரங்களில் சிறுகீரை வைத்து உருண்டை குழும்பு வைத்தால், குழும்பு மற்றும் பதார்த்தம்இவை இரண்டிற்கும் ஒன்று சேர்த்தார் போல் இந்த கீரை உருண்டை குழம்பை உடனடியாக செய்துவிடலாம்.சிறுகீரை வைத்து கூட்டு , பொரியல் தான் பலரும் செய்வர். இங்கு வித்யாசமாக சிறுகீரைஉருண்டை குழம்பு ஒரு சரியான பக்குவத்தில் வருவதற்கு இங்கு கூறப்பட்டுள்ள குறிப்புகளைசரியாக பின்பற்றி செய்து பாருங்கள்.

Ingredients:

  • 1 கைப்பிடி பொடியாக நறுக்கிய சிறுகீரை
  • 100 கிராம் துவரம் பருப்பு
  • 100 கிராம் கடலைப் பருப்பு
  • 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 2 காய்ந்த மிளகாய்
  • புளி
  • 1 டீஸ்பூன் சாம்பார் பொடி
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் வெந்தயம்
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. கீரையை சிறிதளவு எண்ணெயில் வதக்கவும்.
  2. துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு மூன்றையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து. காய்ந்தமிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
  3. புளியைக் கரைத்து அதனுடன் சாம்பார் பொடி சேர்க்கவும்.
  4. வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, அரைத்த பருப்பு விழுதை சேர்த்துக் கிளறி, பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
  5. கரைத்து வைத்த புளித் தண்ணீர் சாம்பார் கலவையை கொதிக்கவிட்டு, வதக்கிய கீரை, வேக வைத்த உருண்டைகளை சேர்க்கவும்.
  6. பிறகு சிறிதளவு எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்த்து இறக்கவும்.