காரசாரமான சுவையில் மட்டன் மிளகு வறுவல் செய்வது எப்படி ?

Summary: பெரும்பாலான நபர்களுக்கு பிடித்த ரெசிபி என்றால் அதில் இந்த மட்டன் மிளகு வறுவலாக இருக்கும். அவர்களுக்கு அதில் இருக்கும் காரசாரமான சுவையும், அதிலிருந்து வரும் நல்ல மணமும் மிகவும் பிடித்தபோய் இருக்கும். நீங்கள் இந்த மட்டன் மிளகு வறுவலை ஒரு முறை வீட்டில் செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறுங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு மட்டன் ரெசிபி ஆக இந்த மட்டன் மிளகு வறுவல் மாறி போகும் என்பதில் சந்தேகமே இல்லை. அதன் பின்பு அடிக்கடி அவர்கள் இந்த மட்டன் ரெசிபியை உங்களை செய்து தர சொல்லி தொந்தரவு செய்வார்கள் அந்த அளவிற்கு ருசியாகவும் மணமாகவும் இருக்கும்.

Ingredients:

  • ½ KG மட்டன்
  • ½ tbsp மஞ்சள் தூள்
  • ½ tbsp உப்பு
  •  தண்ணீர்
  • 3 tbsp எண்ணெய்
  • 15 சின்ன வெங்காயம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • உப்பு
  • 2 tbsp மல்லி
  • ½ tbsp சீரகம்
  • ½ tbsp சோம்பு
  • 2 tbsp மிளகு
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 ஏலக்காய்
  • 2 வர மிளகாய்

Equipemnts:

  • 1 குக்கர்
  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் நாம் வாங்கி வந்த மட்டனை இரண்டு முறை தண்ணீரில் வந்து அலசி கொண்டு ஒரு குக்கரில் சேர்த்துக் கொள்ளவும் பின் இதனுடன் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கொள்ளவும்.
  2. அதன் பின்பு மட்டன் வேக வைப்பதற்கு தேவையான அளவு செய்து தண்ணீர் ஊற்றி குக்கரை அடுப்பில் வைத்து ஐந்து விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  3. அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதனுடன் இரண்டு டீஸ்பூன் மல்லி, அரை டீஸ்பூன் சீரகம், அரை டீஸ்பூன் சோம்பு, இரண்டு டீஸ்பூன் மிளகு, இரண்டு வரமிளகாய், இரண்டு கிராம்பு, ஒரு பட்டை மற்றும் ஒரு ஏலக்காய் சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  4. அதன் பின்பு நாம் வறுத்து எடுத்த பொருட்களை நன்கு குளிர வைத்து அதன் பின் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அறைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் மூன்று டீஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
  5. பின் எண்ணெய் நன்கு காய்ந்ததும் 15 சின்ன வெங்காயங்களை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். பின் இதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். பின் வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் நம் குக்கரில் வேகவைத்த மட்டனை அந்த தண்ணீருடன் கடாயில் சேர்த்து கிளறி விடுங்கள்.
  6. பின் வறுத்து பொடி செய்த பொடியை சேர்த்து நான்கு கிளறி விட்டு தண்ணீர் வற்றும் வரை வேக வைத்துக் கொள்ளுங்கள். மட்டன் கிரேவி பதத்திற்கு வரும் பொழுது உப்பு சரிபார்த்துக் கொள்ளுங்கள் பின் தண்ணீர் நன்றாக வற்றியதும் உங்களுக்கு ஏற்ற பதத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான மட்டன் மிளகு வறுவல் தயார்.