சுவையான பேரிச்சை பழ மில்க் ஷேக் இப்படி செஞ்சி பாருங்க! ஒரு சொட்டு கூட மிஞ்சமிருக்காது!

Summary: குழந்தைகள் பள்ளி முடிந்து வந்தவுடன் கடைகளிலிருந்து மில்க் ஷேக்குகள் ஜூஸ்கள் வாங்கித் தருவதை விட நாமே செய்து கொடுக்கும் பொழுது அதன் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. குழந்தைகளுக்கும் சத்து நேரடியாக செல்கிறது காரணம் நாமே செய்து கொடுக்கும் பொழுது நமக்கு ஏற்படும் மன திருப்தி அவர்களுக்குமகிழ்ச்சி என இரண்டும் நிறைந்திருக்கிறது.பேரிச்சை பழம் உலர்ந்த நட்ஸ்கள் உடலுக்கு வலிமை தரக்கூடியவை. ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதற்கும் ரத்தத்தை சுத்தம் செய்வதற்கும் நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியை கொடுப்பதற்கும் இவை பயன்படுகின்றன. இவற்றை பாலோடு கலந்து உண்ணும் பொழுது அதிக அளவில் கால்சியம் வைட்டமின் புரோட்டின் இரும்பு சத்து அனைத்தும் கிடைக்கின்றது.

Ingredients:

  • 2 கப் பால்
  • 15 பேரிச்சைபழம்
  • 1/2 கப் ஊறவைத்த பாதாம்
  • 1/2 கப் முந்திரி
  • 2 ஸ்பூன் பிஸ்தா
  • ஏலக்காய் பொடி
  • 500 மில்லி மில்லி பால்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் பேரிச்சை பழங்களில் விதைகளை நீக்கிவிட்டு எடுத்து வைத்து கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2  கப் பாலை ஊற்றி காய்ச்சவும்.
  2. பால் சூடான பிறகு அதில் பேரிச்சை பழம்,  ஊற வைத்து தோல்நீக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா சேர்த்து நன்றாக வேக வைக்கவும். 10 முதல் 15 நிமிடங்கள்  மீடியம் ப்ளேமில் வைத்து நன்றாக வெந்ததும் ஏலக்காய்  பொடி சேர்க்கவும்.
  3. நன்றாக கிளறி பால் கெட்டியாக மாறியதும் அடுப்பை அணைத்து விட்டு ஆற வைக்கவும். பால்பேரிச்சை நன்றாக ஆறிய பிறகு மிக்ஸியில் ஜூஸர் ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைக்கவும்.
  4. அரைத்த விழுதை தனியாக எடுத்து  வைக்கவும். ஜூஸர் ஜாரில்  அரைத்த விழுது 2 ஸ்பூன்  500 மில்லி காய்ச்சி ஆற வைத்து ஃப்ரிட்ஜ்ஜில் குளிரூட்டிய பாலை சேர்க்கவும்.
  5. மிக்ஸியில் அரைத்து ஜூஸ் க்ளாஸில் ஊற்றி பொடியாக நறுக்கிய  பாதாம்,பேரிச்சை சேர்த்து பரிமாறினால் சுவையான சத்தான  பேரிச்சைபழ மில்க் ஷேக் தயார்.