பாலக் கீரை ஆம்லெட் இப்படி செய்து பாருங்கள், ஆஹா! இதன் ருசியே தனி ருசி தான்!

Summary: நாம சுவையான ஒரு பாலக் ஆம்லெட் ரெசிபியை தான்பார்க்கப் போகின்றோம். யார் வேண்டுமென்றாலும் இந்த ஆம்லேட்டை செய்யலாம். அதேசமயம் உடலுக்குஆரோக்கியம் தரக்கூடிய சில பொருட்களையும் இதோடு சேர்த்து செய்யப் போகின்றோம். குழந்தைகள்முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய பாலக், சேர்த்த ஆம்லெட் மிக மிக எளிமையாகசெய்வது எப்படி. சுவையான வித்தியாசமான இந்த ரெசிபியை தெரிஞ்சி வச்சிக்கிட்டா காலை பிரேக்ஃபாஸ்ட்டை சூப்பராக முடிக்கலாம். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Ingredients:

  • 1 கைப்பிடி ஸ்பினாச் கீரை
  • 1 வெங்காயம்
  • 2 முட்டை
  • 1 பச்சை மிளகாய்
  • 1 தக்காளி
  • சீஸ் துருவல்
  • 1 தேக்கரண்டி பால்
  • வெண்ணெய்
  • உப்பு
  • மிளகு தூள்
  • மஞ்சள் தூள்

Equipemnts:

  • 1 தோசை கல்

Steps:

  1. வெங்காயம், பச்சை மிளகாய், கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியில் உள்ள சதை பகுதியை நீக்கி பொடியாக நறுக்கவும்.
  2. வெண்ணெயில் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து உடையாமல் வதக்கவும். கீரை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
  3. பாலில் உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும். அதனுடன் முட்டை, சீஸ், வதக்கிய பொருட்கள் சேர்த்து கலந்து வைக்கவும்.
  4. பானில் வெண்ணெயை உருக்கி ஆம்லெட் ஊற்றவும். வெந்ததும் சூடாக பரிமாறவும்.