Summary: பொதுவாகவே இனிப்பு வகைகளுக்கு பண்டிகை காலங்கள் மட்டுமின்றி எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு. அதில் அல்வா அதனின் தனித்தன்மையால் பலருக்கும் பிடித்தமான ஒரு இனிப்பு வகையாக திகழ்கிறது. அல்வா தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மிகவும் புகழ்பெற்றது. உங்கள் குழந்தைகள் மாலை வேளையில் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? அதுவும் ஸ்வீட் சாப்பிட கேட்டால், வீட்டில் உள்ள பீட்ரூட்டைக் கொண்டு ஒரு சுவையான பீட்ரூட் அல்வா செய்யுங்கள். இந்த பீட்ரூட் அல்வா செய்வது மிகவும் ஈஸி.