தித்திக்கும் சுவையில் குங்கும பூ அரிசி பாயாசம் இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி தான்!

Summary: குங்குமபூஅரிசி பாயாசத்தை வந்து கீர் அப்படின்னு சொல்லுவாங்க. அரிசி கீர் அப்படிங்கறது வட இந்தியாவில் ரொம்பபிரபலமான ஒரு டிஷ் அந்த டிஸ்ஸ எப்படி செய்யலாம். இந்த அரிசி கீர் சாதாரண அரிசி, பாஸ்மதி அரிசி இல்ல உங்கிட்ட இருக்க எந்த அரிசி ஆனாலும் செஞ்சுக்கலாம். பச்சரிசி, புழுங்கரிசி எந்த அரிசியாக இருந்தாலும் பரவாயில்லை. அந்த அரிசியில் இந்த ரைஸ் கீர் அதாவது அரிசி பாயசத்தை செஞ்சு சுவைத்து உன் குடும்பத்துல இருக்க எல்லாருக்கும் பாயாசம் பரிமாறி சந்தோஷத்தையும் மகிழ்ச்சியும் பெற்றுக் கொள்ளுங்கள். இனிப்பு என்பது பரிமாறிக் கொள்வதற்காகத்தான்.

Ingredients:

  • 1 அரிசி
  • 1 சக்கரை
  • 1 1/2 தண்ணீர்
  • 1 பால்
  • 1 சிட்டிகை குங்குமபூ
  • 1 ஏலக்காய்
  • 2 டீஸ்பூன் நெய்
  • 1 பட்டை
  • 1 பட்டை
  • 1 பிரிஞ்சி இலை
  • 1/4 கப் துருவிய தேங்காய்
  • உலர்ந்த திராட்சை
  • பாதாம்
  • முந்திரி

Equipemnts:

  • 1 அகல பாத்திரம்

Steps:

  1. ஒரு மிக்ஸி ஜாரில் அரிசியை சேர்த்து ஒன்று இரண்டாக உடைத்துக் கொள்ளவும். பிறகு அரிசியை நீரில் ஒரு பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
  2. ஒரு அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து தண்ணீர் சூடானது பிறகு பாலை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும் .
  3. ஒரு கடாயில் நெய் சேர்த்து பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, முந்திரி, உலர்ந்த திராட்சை சேர்த்து வதக்கவும்.
  4. பால்கொதித்ததும் அதில் குங்குமபூ மற்றும்  தாளித்தவைகளைசேர்க்கவும்.பால் நன்றாக கொதி வந்ததும் அதில் ஊற வைத்துள்ள அரிசியைசேர்த்துகிளறவும் . 10 முதல்15 நிமிடம் நன்றாக அரிசி  பாலோடுவெந்து வந்ததும் பால் வற்ற ஆரம்பிக்கும் போது அதில் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும்.
  5. சர்க்கரை நன்றாக கலந்து அரிசி நன்றாக வெந்து வந்த பிறகு அதில் பாதாம், தேங்காய் பூ சேர்த்து நன்றாககிளறி இறக்கினால் சுவையான அரிசி பாயாசம் தயார். இந்த அரிசி பாயாசத்தை சூடாகவோ அல்லது பிரிட்ஜில் வைத்து பரிமாறலாம்.