வீட்டில் தோசைகல் இருந்தால் போதும் மொறு மொறு வேஃப்ப்ர் ரோல்ஸ் ஸ்நாக்ஸ் உடனே ரெடி செய்யலாம்!

Summary: பெரியவர்கள் ஆனாலும் எங்கு வேஃப்பர் ரோலை பார்த்தாலும் அவற்றை வாங்கி உண்ண வேண்டும் என்று எண்ணம் மனதிலும் தோன்றும். ஆனால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் யோசித்து வாங்காமல் வந்துவிடுவோம். அப்படி பட்ட  வேஃப்பர் ரோல்ஸ்ஸை அந்த மாதிரி சுவையில வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ரொம்ப டேஸ்ட்டா செஞ்சு சாப்பிட போறோம். வீட்ல இருக்குற பொருட்களை வைத்து இந்த சுவையான வேஃப்பர் ரோல்ஸ் செஞ்சு எல்லாருக்கும் கொடுத்து குறிப்பா குழந்தைகளுக்கு.கொடுத்தால் அவர்கள் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.

Ingredients:

  • 1 கப் மைதா மாவு
  • 12 கப் பொடித்த சர்க்கரை( சீனி)
  • 12 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • 2 டீஸ்பூன் கோகோ பவுடர்
  • 1 டீஸ்பூன் வெண்ணிலா எஸன்ஸ்
  • 1 டீஸ்பூன் உருக்கிய வெண்ணெய்
  • 12 கப் பால்

Equipemnts:

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. ஒரு பாத்திரத்தில்  மைதாமாவு, பொடித்த சர்க்கரை சேர்த்து நன்றாக கவக்க வேண்டும். பின் அதில் பேக்கிங் பவுடர் , கோகோ பவுடர் சேர்த்து அனைத்தும் ஒன்றாக கலக்குமாறு கிளறி விட வேண்டும்.
  2. அந்த கலவையில் வெண்ணிலா எஸன்ஸ் மற்றும் உருக்கிய வெண்ணெய் சேர்த்து  நன்றாக கலக்கவும்.பின் பாலை  சிறிது சிறிதாக  மாவில்சேர்த்து கலந்து விடவும்.தோசை மாவு பதத்திற்கு வந்தவுடன் மாவை எடுத்து கொள்ளவும். ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் நன்றாக தேய்க்கவும்.
  3. பின்பு சிறிய  குழிஸ்பூனால் மாவை எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி தோசை சுடுவதை போல் மெல்லியதாக தேய்க்கவேண்டும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு எடுக்கவும்.
  4. ஒரு ஸ்ட்ராவை அந்த தோசை மேல் வைத்து ரோல் போல உருட்டி கொள்ள வேண்டும். இவ்வாறு  அனைத்துமாவையும் செய்து எடுத்து  வைத்துகொண்டால் சூடான மொறு  மொறுவேஃப்பர் ரோல்ஸ் தயார்.
  5. ரோல்ஸ் உள்ளே உருக்கிய சாக்லேட்டை  ஊற்றிகொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.