சுவையான நுங்கு இளநீர் ஜூஸ் இப்படி ஒரு முறை செஞ்சி பாருங்க! யாரும் வேண்டாம்னே சொல்ல மாட்டாங்க!

Summary: இளநீரில் நிறைய நுண்ணூட்டச்சத்துகள் இருக்கின்றன. குறிப்பாக பொட்டாசியம், மக்னீசியம், நீர்ச்சத்து மற்றும் குளிர்ச்சித்தன்மை அதிக அளவில் காணப்படுகின்றன.அந்த மாதிரி நுங்கு உடலிற்கு ரொம்ப குளிர்ச்சியை தரக்கூடியது. நுங்கில் இருந்து தான் பதநீர், கள் தயாரிக்கிரார்கள். கோடைக்காலத்தில் ஏற்படும் வெப்பம் சார்ந்த நோய்களான வயிற்றுக்கழிச்சல், வயிற்று வலி, சூட்டினால் ஏற்படும் செரிமான உபாதைகளுக்கு நுங்கு நல்ல மருந்து. நுங்கு துவர்ப்புத்தன்மை உடையது.அதன் தோலுடன் சாப்பிட்டால் வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.

Ingredients:

  • 1 இளநீர் வழுக்கை  தேங்காயோடு
  • 1 பனங்காய் நொங்கு
  • 1 டீஸ்பூன் கற்கண்டு

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. மிக்ஸி ஜாரில் நுங்கின் சதை பகுதியை சேர்க்க வேண்டும்.
  2. பின் இளநீரை ஊற்ற வேண்டும்
  3. இளம் வழுக்கை தேங்காயை நறுக்கி சேர்க்கவும்.
  4. இவைகளுடன் கற்கண்டை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து ஜூஸ் டம்ளரில் ஊற்ற வேண்டும்.
  5. பிறகுஇந்த ஜூஸில் நுங்கு மற்றும் இளநீர் வழுக்கை தேங்காயை பொடியாக நறுக்கி சேர்த்தால் சுவையான உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய நுங்கு இளநீர் ஜூஸ் தயார்.