நாவில் எச்சி ஊறும் கல்யாண வீட்டு அரிசி பாயசம் செய்வது எப்படி ?

Summary: எப்போதும் ஒரே மாதிரியான பாசிப்பருப்பு, சேமியா, ஜவ்வரிசி பாயசம் போல் இல்லாமல் இந்த அரிசி பாயசம் ரொம்பவே வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். இருந்தாலும் கால்யாண வீடுகளில் வைக்கும் அரிசி பாயசம் சுவைக்கு வருமா அதனால் இன்று கல்யாண வீட்டு சுவையில் அரிசி பாயசம் செய்து பார்க்க போகிறோம் சாப்பிட சாப்பிட திகட்டாத இந்த அரிசி பாயசம் ஒருமுறை நீங்களும் செய்து கொடுத்தால் மீண்டும் மீண்டும் கண்டிப்பாக செய்ய சொல்லி கேட்பார்கள்.

Ingredients:

  • 100 கிராம் உடைத்த பச்சரிசி
  • 200 கிராம் வெல்லம்
  • 1 கப் தேங்காய்ப்பால்
  • நெய்
  • முந்திரி, கிஸ்மிஸ்
  • ஏலக்காய் தூள்

Equipemnts:

  • 1 குக்கர்

Steps:

  1. முதலில் உடைத்த பச்சரிசியை நன்றாக கழுவி குக்கரில் போட்டு நன்கு வேகவைத்துக் கொள்ள வேண்டும்.
  2. பிறகு வெந்த அரிசியுடன் வெல்லம் போட்டு அது கரைந்தவுடன் ஏலக்காய் தூள், சேர்த்து நன்றாக கிளறவும்.
  3. அடுத்து நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ், போட்டு கடைசில் தேங்காய்ப் பால் ஊற்றி ஒரு கொத்தி வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி சூடாக பரிமாறவும்.
  4. சூப்பரான அரிசிப்பாயாசம் ரெடி.
  5. தேங்காய் பாலுக்குப் பதிலாக துருவிய தேங்காயையும் போடலாம்.