குக் வித் கோமாளி சகிலா செய்த ருசியான மட்டன் பாயா ரெசிபி இப்படி நீங்களும் சுலபமாம செஞ்சி பாருங்க!

Summary: அசைவம் என்றால் போதும் எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவ பிரியர்கள் மட்டன், சிக்கன், மீன் என்று சமைத்து சாப்பிடுவார்கள். அதிலும் மட்டன் வைத்து எந்த ரெசிபி செய்து கொடுத்தாலும் செய்த அடுத்த சில நிமிடங்களில் அனைத்தும் காலி ஆகி விடும். அந்த அளவிற்கு மட்டன் அதற்கென ஒரு தனி சுவையை தரும். மட்டன் பாயா, அசைவப் பிரியர்களின் ஃபேவரிட் உணவு. மட்டன் கொண்டு செய்யப்படும் உணவு வகைகள் மிக பிரபலம். அதிலும் மட்டனை வைத்து செய்யப்படும் பாயா டிபன் வகைகளுக்கு சிறந்த சைடுடிஷ் ஆகும். ஆப்பத்திற்கு பொருத்தமான சைட் டிஷ் இது. இந்த மட்டன் பாயாவில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் அதிகளவில் உள்ளன.

Ingredients:

  • 300 கி மட்டன்
  • 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 கேரட்
  • 2 உருளைக்கிழங்கு
  • 1 ஸ்பூன் உப்பு
  • 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
  • 3 கப் தேங்காய் பால்
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி

Equipemnts:

  • 1 குக்கர்
  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் குக்கரை அடுப்பில் வைத்து மட்டனை கழுவி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு 5 முதல்‌ 6 விசில் வரை விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
  3. பின்‌ வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் சிறிது வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  4. இஞ்சி பூண்டு வாசனை போனவுடன் நறுக்கிய கேரட் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து கலந்து சிறிதளவு தண்ணீர் விட்டு வேக விடவும்.
  5. உருளைக்கிழங்கு கொஞ்சம் வதங்கினதும் வேகவைத்து மட்டன் சேர்த்து அதனுடன் தேங்காய்ப் பால் 2 கப் சேர்த்து கொதிக்க விடவும்.
  6. தேங்காய் பால் சுண்டியதும் மீதம்‌ இருக்கும் தேங்காய் பால், உப்பு, மற்றும் மிளகு தூள் சேர்த்து கலந்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
  7. மட்டன்‌ நன்கு வெந்து தேங்காய் பால் சுண்டியதும் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்து விடவும்.
  8. அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான மட்டன் பாயா தயார்.