90's கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை பால்கோவா கேக் இப்படி வீட்லேய செய்து பாருங்கள்!

Summary: ஸ்கூல் படிக்கிற காலங்களில் நிகழந்தவை நினைவுகளா வந்து ரொம்ப சந்தோஷமான நினைவுகளா இருக்கும். ஒருவர் விஷயம் சொல்லி சந்தோஷப்பட விஷயங்களாக இருக்கும் . அப்படி இருக்கிறப்போ அந்த விஷயங்களை எப்படி பார்க்கிறோம் அப்படினா இப்போ கடைகளில் போய் அந்த ஸ்வீட்சை எல்லாம்  பார்க்கும்போதுநம்ம  பள்ளிக்கூடத்தில்படிக்கும் போது எப்படி வாங்கி சாப்பிட மாதிரி இருக்குமா?. அப்படிப்பட்ட ஒரு பெட்டிக்கடை ஸ்வீட் தான் இந்த பால்கோவா இந்த பால்கோவாக மீண்டும் பள்ளிகே போய் அந்த பெட்டி கடையில வாங்கி சாப்பிட டேஸ்ட்லயே இந்த பெட்டிக்கடை பால்கோவாவை செய்து சாப்பிட்டு சந்தோஷப்படலாம் வாங்க. எப்படி அந்த பால்கோவா பண்ணலாம் அப்படின்னு பார்க்கலாம்.

Ingredients:

  • 1 கப் பொட்டுக்கடலை
  • 1 கப் சர்க்கரை
  • 1/2 கப் நெய்
  • 2 ஏலக்காய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. மிக்ஸி ஜார்ல ஒரு கப் பொட்டுக்கடலை, ஒரு கப் சர்க்கரை 2 ஏலக்காய் சேர்த்து நன்றாக பொடித்துக் கொள்ள வேண்டும்.
  2. பிறகு ஒரு வானலியை அரை கப் நெய்யை ஊற்றி  நெய்சூடானவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
  3. பொடித்த மாவையை நெய்யில் கொட்டி நன்றாக ஒன்றோடு ஒன்று  கலக்குமாறுகிளறி விடவும் .
  4. பிறகு ஒரு அகன்ற கப் அல்லது பிளேட்டில் இந்த கலவையை கொட்டி நன்றாக அழுத்தி சமன் செய்யவும்.
  5. சூடு ஆறிய பிறகு மாவு நன்றாக செட் ஆன உடன் கத்தியைவைத்து சதுர துண்டுகளாக வெட்டி எடுத்தோம் என்றால் சுவையான நாவில் வைத்த உடனே கரையக்கூடிய 90களில்பள்ளி பருவ நினைவுக்கு கொண்டு செல்லக்கூடிய பெட்டிக்கடை பால்கோவா தயார்.