Summary: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் எல்லாருக்குமே காய்கறிகளில்விதவிதமான உணவுகள் செய்து கொடுக்கிறது ரொம்பவே நல்லது . குழந்தைகளுக்கு அதிகமான சத்துக்கள் கிடைக்க இந்த காய்கறிகள் ரொம்ப உதவியா இருக்கும். இந்த வெஜிடபிள் பீட்சால வெறும் காய்கறிகள் மட்டுமல்லாமல் உங்களுக்கு விருப்பம் இருந்தால் காளான் பன்னீர் எல்லாமே நீங்க சேர்த்துஇந்த வெஜிடபிள் பீட்சாவ செய்து சாப்பிடலாம். இல்லை குழந்தைகளுக்கு சீஸியான பிட்சா தான் பிடிக்கும் அப்படின்னா நம்ம இந்த பீசா ரெடி பண்ணிட்டு அது மேல சீஸ் வச்சு சூடு பண்ணி கொடுக்கலாம். குழந்தைகளை எப்படி சாப்பிட வைக்கனும் அவங்களுக்குவிருப்பமில்லாத பிடிக்காத உணவுகளை கூட பிடித்த மாதிரி கொடுக்கணும் . எதாவது வித்தியாசமா பண்ணாதான் இந்த காலத்து குழந்தைகளை சத்தான உணவுகளை உண்ண வைக்க முடியும். அதனால நம்ம வெஜிடபிள்ஸ் வெரைட்டி வெரைட்டியா செஞ்சு கொடுக்கும்போது அது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். சரி வாங்க இப்ப நம்ம அந்த வெஜிடபிள் சீஸி பீட்சா எப்படி செய்யறது