சுவையான கருவேப்பிலை ஜூஸ் செய்வது எப்படி ?

Summary: பெரும்பாலான மக்கள் தாங்கள் தாகத்தை தனிக்க தங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் ஏன் குழந்தைகள் குடிப்பதற்கு கூட கடைகளில் விற்கும் குளிர்பானங்களை தான் வாங்குகிறார்கள். நீங்கள் இப்படி குளிர்பானங்கள் குடிப்பதால் உங்களின் உடம்பில் நச்சுத்தன்மையை தான் அதிகரிக்கிறது. ஆகையால் அதை வாங்கி குடிப்பதை தவிர்த்து விட்டு உங்கள் வீட்டிலேயே பழ ஜூஸ், காய்கறி ஜூஸ் போன்றவற்றை தயாரித்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பருகக் கொடுங்கள். அதனால் இன்று கருவேப்பிலை ஜூஸ் பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் கருவேப்பிலையை ஜூஸை குடிக்கும் பொழுது உங்கள் உடம்புக்கு அதிகப்படியான இரும்பு சத்துகள் கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் உடல் எடையை குறைக்கும் நபர்கள் காலையில் வெறும் வயிற்றில் இதை செய்து குடித்தால் உடல் எடை சட்டென்று குறைந்து விடும்.

Ingredients:

  • 1 கட்டு கருவேப்பிலை
  • 1 பழம் எலுமிச்சை
  • 1 tbsp உப்பு
  • 2 ½ டம்பளர் தண்ணீர்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்
  • 3 கண்ணாடி கிளாஸ்

Steps:

  1. முதலில் நாம் வைத்திருக்கும் ஒரு கட்டு கருவேப்பிலையின் இலைகளை ஆய்ந்து தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு பெரிய பாத்திரத்தில் கருவேப்பிலை இலையை போட்டு அதனுடன் சிறிது அளவு தண்ணீர் சேர்த்து இலைகளை நன்றாக அலசிக்கொண்டு தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  2. இவ்வாறு கழுவிய கருவேப்பிலை இலைகளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து அந்த சாறையும் சேர்த்துக் கொள்ளவும். பின் இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவு உப்பு மற்றும் ஒன்றரை டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து மகருவேப்பிலையை மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  3. கருவேப்பிலை நன்கு அரைப்பட்டதும் மேலும் ஒரு ஒன்றரை டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள் அவ்வளவு தான் சுவையான கருவேப்பிலை ஜூஸ் ரெடி ஆகிவிட்டது.
  4. பின் மிக்ஸி ஜாரில் இருந்து ஒரு வடிகட்டி ஒரு வடிகட்டியை வைத்து வடிகட்டி வேறு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள், பின் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு டம்ளரில் ஊற்றி குடிக்க கொடுங்கள் மிகவும் சத்தானது.