புலாவ் விரும்பி சாப்பிடுபவர்கள் இப்படி வெந்தயம்  போட்டு ருசியான வெந்தய புலாவ்  செஞ்சு பாருங்க!

Summary: வெந்தயத்தை வைத்து செய்யும் சமையல் வகைகள் இந்தியாவில் பிரபலமாக உள்ளன மற்றும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. இது இந்தியில் சாவா என்றும், கன்னடத்தில் சப்பாசிகே சொப்பு என்றும், தெலுங்கில் சோ-குரா என்றும்,பஞ்சாபியில் சோவா என்றும், குஜராத்தியில் சுவா என்றும், மராத்தியில் ஷேபு என்றும் அழைக்கப்படுகிறது. இவை வீட்டில் செய்து உண்பதற்கு மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி, மற்றும் அலுவலகங்களுக்கு கொண்டு செல்லவும் சிறந்த மதிய உணவாக திகழ்கின்றன.

Ingredients:

  • 2 கப் அரிசி
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 டீஸ்பூன் நெய்
  • 1 பட்டை
  • 1 கிராம்பு
  • 1 ஏலக்காய்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 தக்காளி
  • 2 மேஜை கரண்டி வெந்தயம்
  • 1 கப் கொத்தமல்லி இலை மற்றும் புதினா
  • 4 கப் தண்ணீர்
  • உப்பு

Equipemnts:

  • 1 குக்கர்

Steps:

  1. முதலில் வெந்தயம் மற்றும் அரிசியை தனித்தனியாக அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. முதலில் குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். பின் நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது மற்றும் நீளமாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கி விடவும்.  பின்அரை மணி நேரம் ஊற வைத்த வெந்தயம்மற்றும் அரிசியை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  4. அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு, மல்லி, புதினா இலைகள் நெய் இவற்றை சேர்த்து கலந்து விட்டு குக்கரை மூடி மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான, ஆரோக்கியமான வெந்தய புலாவ் தயார்.