மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட சோள பணியாரம் இப்படி வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க!

Summary: வீட்டில் இருப்பவர்களுக்கு பணியாரம் சாப்பிட வேண்டும் என்று ஆசை வரும்.. கடையில் போய் தான் பணியாரம்வாங்கி வர வேண்டும் என்று அவசியம் கிடையாது. உங்க வீட்டில் சோள பணியாரம்  பின் சொல்லக்கூடிய முறையில் செய்து பாருங்கள். சாப்பிடுவதற்குஅவ்வளவு ருசியாக இருக்கும். சோளம் சேர்த்து நம் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் செய்வதால்இதை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் வயிற்றுக்கும் எந்த கெடுதலும் இருக்காது. இந்தசெய்முறையில் சோள மாவைதயார் செய்து,இட்லி தோசை கூட செய்யலாம்.வாருங்கள் இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Ingredients:

  • 1 கப் சோளம்
  • 1/4 கப் உளுந்து
  • 1/4 தேக்கரண்டி வெந்தயம்
  • உப்பு
  • 1 வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • கறிவேப்பிலை
  • 1/4 தேக்கரண்டி கடுகு
  • 1/4 தேக்கரண்டி சீரகம்
  • 1/2 தேக்கரண்டி உளுந்து
  • 1/2 தேக்கரண்டி கடலைப்பருப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 குழி பணியார கல்
  • 1 பெரிய பவுள்
  • 1 மிக்ஸி (அ) கிரைண்டர்

Steps:

  1. சோளத்தைச் சுத்தம் செய்து, தன்ணீர் ஊற்றி 4 . 6 மணி நேரம் ஊற வைக்கவும். உளுந்தையும்சுத்தம் செய்து வெந்தயம் சேர்த்து ஊற வைக்கவும்.
  2. வழக்கமாக இட்லிக்கு அரைப்பது போல உளுந்தை அரைத்து எடுத்துக் கொள்ளவும்,சோளத்தை சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
  3. அரைத்த உளுந்து மாவுடன் சோள மாவைச் சேர்த்து கலந்து கொள்ளவும். அத்துடன் உப்பு சேர்த்து கலந்து 8 – 10 மணி நேரம் வரை புளிக்கவிடவும். மறுநாள் மாவு புளித்து தயாராக இருக்கும்.  வழக்கம் போல இட்லி அல்லது தோசையாக ஊற்றலாம்.
  4. பணியாரம் செய்வதற்கு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு மற்றும் கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வதக்கியவற்றை மாவுடன் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
  5. (தேவைப்பட்டால் இட்லி சோடா சேர்க்கலாம்). பணியாரக் கல்லை சூடாக்கி, குழியில் துளி எண்ணெய் விட்டு மாவை எடுத்து பணியாரங்களாக ஊற்றவும்.
  6. ஒரு பக்கம் சிவந்ததும் திருப்பிவிட்டு மறுபக்கமும் வெந்ததும் எடுக்கவும், சுவையான சத்தான சோள இட்லி, தோசை மற்றும் பணியாரம் தயார்.