காரசாரமான ஆந்திரா ஸ்டைல் கீரை மசியல் ஒருமுறை இதே முறையில் செய்து பார்க்கலாம்!

Summary: உடல் ஆரோக்கியமாக இருக்க வாரம் ஒருமுறை கீரையை உணவில் சேர்க்க வேண்டியது அவசியம். அத்தகைய கீரையை பலவாறுசெய்து சாப்பிடலாம். ஆனால் உங்களுக்கு கீரையைக் கொண்டு ஆந்திரா ஸ்டைலில் மசியல் செய்யத்தெரியுமா? இல்லையெனில் இதே முறையில் ஒரு முறை இப்படி செய்தல் அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.  இங்கு அந்திராஸ்டைலில் எப்படி கீரை மசியல் செய கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துஎப்படி இருநதது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Ingredients:

  • 3 கப் பசலைக்கீரை/அரைக்கீரை
  • 1 தக்காளி
  • 3 பச்சை மிளகாய்
  • உப்பு
  • டீஸ்பூன் எண்ணெய்
  • 2 வரமிளகாய்
  • டீஸ்பூன் சீரகம்
  • 6 பற்கள் பூண்டு
  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் சீரகம்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. கீரை நன்கு சுத்தம் செய்யவும். மற்ற தக்காளி பச்சைமிளகாய்யை தயாராக எடுத்து வைக்கவும்.
  2. முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கீரை, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் சிறிது ஊற்றி, மூடி வைத்து, 10 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
  3. பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வறுப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, கீரையில் சேர்த்து, சிறிது உப்பையும் சேர்க்க வேண்டும்.
  4. பின்பு கீரையை ஒரு பாத்திரத்தில் போட்டு மத்து கொண்டு மசிக்கலாம் அல்லது மிக்ஸியில் போட்டு ஒருமுறை அரைத்துக் கொள்ளலாம்.
  5. சுவையான ஆந்திரா கீரை மசியல் தயார்.