வெஜிடபிள் பேன் கேக் வீட்டிலேயே ஓவன் எதுவும் இல்லாமல் பாத்திரத்திலேயே எளிதான முறையில் செய்யலாம்!

Summary: சுவையான இந்த வெஜிடபிள் பேன் கேக் எப்படி செய்யணும் அப்படிங்கறது தெரிஞ்சிகலாம். கஇது குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவங்களுக்கும் ரொம்ப நல்லது. காய்கறிகள் அப்படிங்கிற போது அது எல்லாருக்குமே நல்ல சத்துக்களை கொடுக்கக் கூடியது. அதனால இந்த பேன் கேக் எல்லாருமே விரும்பி சாப்பிடலாம். தேவையான அளவுக்கு காரத்தை கம்மி பண்ணிக்கிறதும் அதிகப்படுத்துகிறது நம்மளோட விருப்பம் .சரி வாங்க எப்படி இந்த சுவையான சத்துமிக்க வெஜிடபிள் பேன் கேக் செய்யலாம் அப்படிங்கறதை பார்க்கலாம்.

Ingredients:

  • 1/2 கப் கோதுமை மாவு
  • 1/2 கப் பொட்டுக்கடலை மாவு (அ) கடலைமாவு
  • 1 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1 டீஸ்பூன் சீரக தூள்
  • 1 பச்சை மிளகாய்
  • உப்பு
  • கொத்தமல்லி
  • தண்ணீர்
  • எண்ணெய்
  • 1 கப் முட்டை கோஸ்
  • 1/2 கப் கேரட்
  • 1/4 கப் மஞ்சள் குடை மிளகாய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 5 பல் பூண்டு

Equipemnts:

  • 1 அடி கனமான பாத்திரம்

Steps:

  1. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து கொஞ்சமா எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், பூண்டு ,பச்சை மிளகாய் சேர்த்து நல்லா வதக்க போறோம்.
  2. பிறகு அதுல முட்டைகோஸ் கேரட் குடைமிளகாய் சேர்த்து நல்ல வதக்கவும்.பின் தேவையான அளவு உப்பு, சீரகத்தூள் ,மிளகுத்தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.நன்றாக மசாலாக்கள் கலந்த பிறகு காய்கறிகள் வேகுவதற்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடி வைக்க வேண்டும்.
  3. காய்கறிகள் வெந்த பிறகு அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் பொட்டுக்கடலை மாவு, கோதுமை மாவு கலந்து விட வேண்டும்.தேவையான அளவுக்கு தண்ணீரை ஊற்றி பேன் கேக் மாவின்  பதத்திற்குகலந்து விட வேண்டும்.
  4. பிறகு அடுப்பில் ஒரு பானை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் சிறிய கரண்டியால் மாவை எடுத்து வட்ட வடிவமாக தட்டி வேக வைக்க வேண்டும்.ஒரு புறம் வெந்ததும் மறுபுறத்தை திருப்பி போட்டு நன்றாக வேகவைத்து எடுக்க வேண்டும்.
  5. சூடான சுவையான வெஜிடபிள் பேன் கேக் தயார். இந்த வெஜிடபிள் பேன் கேக்கில் உங்களுக்கு பிடித்தமான பன்னீர் ,காளான் , காலிபிளவர் சேர்த்தும் செய்து கொள்ளலாம் சத்துமிக்க சுவையான வெஜிடபிள் பேன் கேக்கை தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.