சுவையான கொள்ளு பருப்பு குழம்பு செய்வது எப்படி ?

Summary: இன்று கொள்ளு பருப்பு குழம்பு பற்றி தான் பார்க்க போகிறோம். கொள்ளு பருப்பு குழம்பு வைத்து அதனுடன் கொள்ளு ரசமும் வைத்து நாம் சாப்பிடும் பொழுது அதன் சுவை அட்டகாசமாக இருக்கும். கொள்ளு நாவிற்கு ருசியை மட்டும் கொடுக்காமல் நம் உணவில் கொள்ளுவை சேர்த்துக் கொள்வதால் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களை கொடுத்து நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு வழி வகுக்கும். ஆம் நாம் கொள்ளுவை சாப்பிடுவதன் மூலம் நமக்கு நன்மை பயக்கும் முக்கிய விஷயம் என்றால் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து மாரடைப்பு மற்றும் வாதம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

Ingredients:

  • 150 கிராம் கொள்ளு
  • 3 டம்பளர் தண்ணீர்
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • 2 மேசை கரண்டி தேங்காய் எண்ணெய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 15 சின்ன வெங்காயம்
  • 6 பல்
  • அரைத்த மசாலா
  • உப்பு
  • கொத்த மல்லி
  • 1 tbsp மல்லி
  • 1 tbsp சீரகம்
  • 5 வர மிளகாய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 குக்கர்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் நாம் எடுத்துக் கொண்ட 150 கிராம் அளவிலான கொள்ளுவை இரண்டு மூன்று முறை தண்ணீரில் நன்கு அலசி கொள்ளுங்கள். பிறகு ஒரு பெரிய பவுளில் கொள்ளுவை சேர்த்து அதனுடன் மூன்று டம்ளர் அளவிலான தண்ணீர் சேர்த்து ஒரு ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
  2. அதன் பின்பு நாம் ஊற வைத்த கொள்ளுவை அந்த தண்ணீருடன் குக்கரில் சேர்த்து அதனுடன் கால் டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை அடுப்பில் வைத்து ஐந்து விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  3. அதன் பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு டீஸ்பூன் அளவு மல்லி, ஒரு டீஸ்பூன் சீரகம் மற்றும் 5 வர மிளகாய் சேர்த்து திருதிருவன பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்பு கடாயை அடுப்பில் வைத்து அதனுடன் இரண்டு மேசை கரண்டி அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.
  4. பின் எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலை நாம் தோலுரித்து வைத்திருக்கும் 15 சின்ன வெங்காயம் மற்றும் ஆறு பல் பூண்டு சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்தவுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஒரு தக்காளியும் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
  5. பின் தக்காளி வதங்கி மசித்து வந்ததும் குக்கரில் வேகவைத்த கொள்ளுவை தண்ணீருடன் சேர்த்து கடாயில் ஊற்றிக் கொள்ளுங்கள் பின் தேவையான அளவு உப்பு மற்றும் நாம் அரைத்த பொடியை சேர்த்து கடாயை மூடி விட்டு ஒரு பத்து நிமிடம் நன்கு கொதிக்க விடுங்கள்.
  6. பின்பு ஒரு கைப்பிடி கொத்தமல்லியை தூவி கடாயை கீழே இறக்கி குளிர வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு பருப்பு மத்து வைத்து கடைந்து விடுங்கள். அவ்வளவு தான் சுவையான கொள்ளு பருப்பு குழம்பு தயாராகிவிட்டது.